Skip to main content

Posts

Showing posts with the label எழுத்தாளர் சோ. தர்மன்

வாழை கதை திருடப்பட்டதா? : எழுத்தாளர் சோ. தர்மன் போடும் பகீர் குண்டு!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வாழை. தனது சிறுவயது வாழ்க்கை வழியே 1999 ஆம் ஆண்டு நெல்லையில் வாழைத்தார் சுமக்கும் கூலித் தொழிலாளர்கள் 19 பேர் பலியான உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் மாரி செல்வராஜ். படத்தின் இறுதிக்காட்சியை கண்டு திரையரங்கில் இருந்து கலங்கிய கண்களுடன் வெளிவரும் பலரும் படத்தை பாராட்டி சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் வாழை படம் எனது சிறுகதை இன்று வாழை திரைப்படமாக உருவாகி வெற்றி பெற்றுள்ளதை எண்ணி பெருமையடைவதாக சாகித்திய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் சோ. தர்மன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள். ’வாழை படம் பாருங்கள். உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது’ என்று. இன்று படம் பார்த்தேன். என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி. வாழைதான் பிரதான விவசாயம். நான் அங்கு போகும் போதெல்லாம் வாழை...