தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...
பாசமலர் சீரியல் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை புவனேஸ்வரி. தொடர்ந்து, சந்திரலேகா, சித்தி என அடுத்தடுத்து தொடர்களில் நடித்து பிரபலமானார். சில சீரியலில் வில்லத்தனமான கதாபாத்திரத்திலும் புவனேஸ்வரி நடித்துள்ளார். பிஸியான நடிகையாக மாறிய ஒரு கட்டத்தில் புவனேஸ்வரி விபச்சார வழக்கில் சிக்கியதால் பட வாய்ப்புகள் குறைந்து போனது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர் இவர். ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் சென்னைக்கு வேலை தேடி வந்த புவனேஸ்வரி, கடுமையான உழைப்பால் டிவி சீரியல் மற்றும் சினிமாக்களில் பலவற்றில் நடித்தார். சேதுராமன் தலைமையில் இயங்கிய தேவர் பேரவையில் மகளிர் அணி தலைவராக இருந்தார். மேலும், சென்னையில் 3, 4 பங்களாக்களை வைத்துக்கொண்டு அதனை சூட்டிங்கிற்கு வாடகைக்கு விட்டு வருகிறார். தற்போது, புவனேஸ்வரி பழைய வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, துறவு பூண்டு சாமியாராக வாழ்ந்து வருகிறார். காசிக்கு சென்று தீட்சையும் பெற்றுள்ளார். அதுமட்டும் இல்லாமல், தினந்தோறும் வளசரவாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் மக்களுக்கு அன்னதானம் செய்து வருகிறார...