சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, மலையாள நடிகை அன்ன பென் நடிப்பில் வினோத் இயக்கியுள்ள கொட்டுக்காளி மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சிறுவர்களான பொன்வேல் மற்றும் சேகர், கலையரசன், திவ்யா துரைசாமி, மலையாள நடிகை நிகிலா விமல் இணைந்து நடித்துள்ள வாழை படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இரண்டு படங்களும் திரை கலைஞர்கள்,, இயக்குநர்கள் என அனைவருக்கும் வெளியீட்டுக்கு முன்பாக சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இரண்டு படங்கள் பற்றியும் திரையுலகினர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். கொட்டுக்காளி படத்தை நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் செய்து நீண்ட கடிதம் ஒன்றை வெளியிட, அதே போன்று இயக்குநர் பாலாவும் பாராட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டார். இதனால் கொட்டுக்காளி படத்திற்கு வணிக படங்களுக்கு இணையாக முன்பதிவு இருந்ததுடன் முதல் மூன்று நாட்களில் சுமார் 1.50 கோடி ரூபாய் மொத்த வசூல் தமிழ்நாட்டில் செய்துள்ளது கொட்டுக்காளி திரைப்படம். இதனை அபூர்வ நிகழ்வாகவே திரையரங்கம், வணிக வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கொட்டுக்காளி படத்தை திரையரங்கில் வெளியிட்டு இருக்க கூடாது என கருத்து தெரிவித...