நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை, ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் மஞ்சன் (55). நேற்றிரவு ஜாபர்கான்பேட்டை பச்சையப்பன் தெரு பகுதியில் படுத்துக் கிடந்துள்ளார். அவர் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. நேற்று இரவு 7.45 மணியளவில் அந்த வழியாக வந்த கார் மஞ்சன் மீது ஏறி இறங்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் கார் எண்ணை வைத்து விசாரித்ததில் அந்த கார் நடிகை ரேகா நாயருடையது என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரது கார் ஓட்டுநரான பாண்டி என்ற 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து ரேகா நாயர் பாலிமர் சேனலிடம் கூறுகையில், “சம்பவ இடத்தில் மன நிலை பாதித்த பிச்சை எடுக்கக் கூடிய ஒருவர் விழுந்து கிடந்தார். அவர் விழுந்து கிடந்தாரா அல்லது வண்டி வரும் ப...