Skip to main content

Posts

Showing posts with the label Coolie

ரஜினியின் கூலி படத்தில் இணையும் கன்னட மாஸ் ஹீரோ!

ரஜினிகாந்த் நடிப்பில் அவரது 171ஆவது படமாக கூலி உருவாகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜிக்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் பிற மொழி முன்னணி திரை கலைஞர்கள் வில்லன், கேமியோ கதாபாத்திரங்களில் நடித்தால் மட்டுமே போட்ட முதலை எடுக்க வணிக ரீதியான வசூல் கிடைக்கும் என்ற சூழல் தமிழ் சினிமாவில் உள்ளது. அந்த அடிப்படையில் கூலி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க தெலுங்கு திரை நட்சத்திரம் நாகர்ஜுனாவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர் மறுத்து விட்டதால், தற்போது கூலி படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய இளம் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமில்லாதவர் உபேந்திரா என்பது குறிப்பிடத்தக்கது. 1995ல் கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஓம் படத்தின் மூலம் அகில இந்திய அளவில் பிரபலமானவர் உபேந்திரா. கன்னட சினிமாவை சர்வதேச...