Skip to main content

Posts

Showing posts with the label GOAT

விஜய்யின் 'கோட்'... 3 மணி நேரம் ஓடும் படமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகவுள்ள ' கோட் ' திரைப்படம் 3 மணி நேரம் ஓடும் திரைப்படம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ' கோட் ' திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், தற்போது அந்தப் படத்தின் ரன் டைம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படத்தின் ரன் டைம் 183 நிமிடங்களாம். சுமார் 3 மணி நேரம் 3 நிமிடம் வரை ஓடும் திரைப்படம் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் படத்தின் நேரம் 179 நிமிடங்கள். மீதமுள்ள நிமிடங்களில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. கோட் படத்தின் தணிக்கை வேலைகள் சில நாட்களுக்கு முன்பு நடந்தேறியது. ஆக, இயக்குநர் வெங்கட்பிரபுவின் 'மங்காத்தா ' படத்தைப் போலவே இந்தப் படத்திலும் மேக்கிங் வீடியோ கிளைமாக்ஸில் இடம்பெறவுள்ளது எனத் தெரிகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி, பிரேம்ஜி, வைபவ், அரவிந்த் ஆகாஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள...