Skip to main content

Posts

Showing posts with the label Malayalam Cinema News

அம்மாவில் அச்சச்சோ... தலைவர் மோகன்லால் தலைமையில் கூண்டோடு ராஜினாமா

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதையடுத்து, அம்மா தலைவர் பதவியில் இருந்து நடிகர் மோகன்லால் பதவி விலகியுள்ளார். அம்மா என்று அழைக்கப்படும் கேரள நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளே பலர் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர். பாலியல் புகார் சொல்லப்பட்டதையடுத்து,  கேரள பிலிம் அகாடமி தலைவர் பதவியில் இருந்து இயக்குநர் ரஞ்சித் விலகியுள்ளார்.  பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா ரஞ்சித் மீது பாலியல் தொல்லை கொடுத்தாக போலீசிலும் புகார் அளித்துள்ளார். இமெயில் வழியாக  கொச்சி போலீசுக்கு அளிக்கப்பட்டுள்ள புகாரை எஸ்.பி பூங்குழலி விசாரித்து வருகிறார். ஸ்ரீலேகா  மித்ரா, டைரக்டர் ரஞ்சித் மற்றும் சாட்சியங்களிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.தொடர்ந்து , பல நடிகைகள் இயக்குநர்கள், நடிகர்கள் மீது புகார் தெரிவித்து வருகின்றனர். கொல்லம் தொகுதி எம்.எல்.ஏவும் நடிகருமான முகேஷ் மீதும் பாலியல் புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், பாலியல் வன்கொடுமைகள் குறித்து அம்மாவின் செயற்குழு கூட்டத்தில்  விவாதிக்கப்பட இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், தலைவர் மோகன்லால் சென்னையில் இருந்ததால், விவாதம் தள்ளிப் போடப்பட...