Skip to main content

18 வருடங்களுக்கு பிறகு... ஜோடி சேரும் சூர்யா-ஜோதிகா... இயக்குனர் யார் தெரியுமா...?!

 தமிழ் சினிமாவில் பலருக்கும் பேவரைட் ஆன ரியல் ஜோடி சூர்யாவும், ஜோதிகாவும் தான். இருவரும் தங்கள் கேரியரில் சிறந்து விளங்கிய போது திருமணம் செய்து கொண்டனர்.

இல்லற வாழ்க்கையில் மட்டுமல்லாது, இருவரும் சினிமா உலகிலும் சாதித்து வருகின்றனர். இவர்களுக்கு தியா, தேவ் என்று இரு குழந்தைகள் இருக்கின்றனர்.

திருமணத்திற்கு பின்பு சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்த ஜோதிகா சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் நடிக்க வந்தார். தற்பொழுது இருவரும் பிசியாக வெவ்வேறு படங்களில் நடித்து வருகின்றனர்.

ஜெய் பீம், சூரரைப் போற்று என அடுத்தடுத்து ஹிட்களை கொடுத்த சூர்யா யாருமே எதிர்பார்க்காத வண்ணம் 'விக்ரம்' படத்தில் வில்லனாக தோன்றி மிரட்டினார். தொடர்ந்து முற்றிலும் வித்தியாசமான லுக்கில் 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதேபோல நடிகை ஜோதிகாவும் மலையாளத்தில் 'காதல் டு தி கோர்', ஹிந்தியில் 'சைத்தான்' போன்ற பிற மொழி திரைப்படங்களில் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய ஜோதிகா மீண்டும் என்னையும், சூர்யாவையும் சேர்த்து நடிக்க வைக்க யாரும் இல்லையா? என்பது போல கேள்வி எழுப்பி இருந்தார்.

அந்த வருத்தத்தை நிவர்த்தி செய்யும் வகையில் தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது 90ஸ் கிட்ஸின் பேவரைட் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து நடிக்க இருக்கின்றனர்.

இந்த படத்தை 'சில்லு கருப்பட்டி' பட இயக்குனர் ஹலிதா சமீம் அல்லது 'பெங்களூர் டேஸ்' திரைப்பட இயக்குனர் அஞ்சலி மேனன் இயக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஜோடி திரையில் மீண்டும் தோன்றினால் கண்டிப்பாக படம் ஹிட்டடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதன் மூலம் சூர்யா-ஜோதிகா தம்பதியர் 18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கவினின் ஸ்டார் ரிலீஸ் தேதி இதுதான்..!

Rathnam: அடிச்சது ஜாக்பாட்…சோலோவாக களமிறங்கும் விஷால்… காரணம் என்ன?

ஈஷா தன்னார்வலர் மாயமான வழக்கு : காவல்துறை பதில்!

Comments

Popular posts from this blog

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு ம...

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...