கோமாளி, லவ் டுடே போன்ற ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.
லவ் டுடே படத்தை இயக்கியது மட்டுமின்றி அந்த படத்தில் ஹீரோவாகவும் நடித்து அசத்தினார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து அனைவரையும் வியக்க வைத்தது.
அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் யாருடன் என்று கோலிவுட் வட்டாரமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நேரத்தில்,
அடுத்ததாக நான் படம் இயக்கப் போவதில்லை, மீண்டும் ஹீரோவாக நடிக்கப் போகிறேன் என்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் பிரதீப் ரங்கநாதன்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் LIC படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் படம் டிராகன். ஓ மை கடவுளே படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தான் டிராகன் படத்தை இயக்குகிறார்.
டிராகன் படம் குறித்த புரோமோ வீடியோ, போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த மே 6ஆம் தேதி டிராகன் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளதாக இயக்குநர் அஸ்வத் அறிவித்துள்ளார்.
அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அதற்காக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து திட்டமிட்டு வருகிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
டிராகன் படத்தின் படப்பிடிப்பு புயல் வேகத்தில் நடைபெற்று வருவதால் இந்த ஆண்டே படத்தின் ஷூட்டிங்கை முடித்து ரிலீசும் செய்து விடுவார்களோ என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
லவ் டுடே படத்திற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு 1.5 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது என்றும், தற்போது டிராகன் படத்தில் நடிப்பதற்காக பிரதீப் ரங்கநாதன் 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்று உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...
11 மாதங்களாக சிறை… செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?
CSK vs RCB ஆட்டத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை தகுதி பெறுமா?
டாப் 10 செய்திகள் : மோடி வாகன பேரணி முதல் செந்தில் பாலாஜி வழக்கு வரை!
Comments
Post a Comment