நடிகர் பிருத்விராஜ் படப்பிடிப்பில் 16 வயது சிறுமி, தாய் பாலியல் வன்கொடுமை.... நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!
மலையாளத் திரையுலகில் நடிகைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் கலாச்சாரம் ஆழமாக வேரூன்றி உள்ளதாக ஹேமா கமிஷன் அறிக்கையில் தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து மலையாள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மீது தொடர்ந்து நடிகைகள் பலரும் பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைத்து வருகின்றனர்.
விவகாரம் முற்றியதையடுத்து, மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகியுள்ளனர்.
நடிகைகளுக்கு எதிரான துன்புறுத்தல்களைப் பற்றி விசாரிக்க 7 பேர் கொண்ட சிறப்புக் குழு ஒன்றை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அமைத்து உத்தரவிட்டார். இதுவரை 14 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில் நடிகர் பிருத்விராஜ் படப்பிடிப்புத் தளத்தில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகை ஒருவர் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.
பிபின் பிரபாகர் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ஒன் வே டிக்கெட் என்ற படம் வெளியானது . இதில் நடிகர் பிருத்விராஜ், பாமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நடிகர் மம்முட்டியும் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது 16 வயது சிறுமி மற்றும் அவருடைய தாய் இரண்டு பேரும் தங்க வைக்கப்பட்டனர். இரு வார காலமாக சிறுமியும் அவரின் தாயும் அங்கு தங்கியுள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்து வரப்படவே இல்லை.
இந்த நிலையில் கேமிராமேன்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் படக்குழுவைச் சேர்ந்த பலரும் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி மற்றும் அவரின் தாய் இருவரும் தன்னிடம் தெரிவித்து அழுதனர் என்று நடிகை ஒருவர் தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்....
-எம்.குமரேசன்
சனம் ஷெட்டிக்கு வந்த ஃபோன் கால்….என்ன நடந்தது?
விபத்தில் இருவர் சாவு… இரக்கமே இல்லாமல் சிரித்த பாகிஸ்தான் இளம்பெண்
Comments
Post a Comment