Skip to main content

வேற லெவல் படம்... 'டிமான்ட்டி காலனி 2' பார்த்து மிரண்டுபோன விநியோகஸ்தர்!

 "எனது வாழ்நாளில் 'டிமான்ட்டி காலனி 2'  படத்தைப் போல ஒரு ஹாரர் திரைப்படத்தை சீட்டின் நுனியில் அமர்ந்து பார்த்ததில்லை" என்று விநியோகஸ்தர் வருண் தெரிவித்துள்ளார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு கோப்ரா படம் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்னதாக படம் பற்றிய பிம்பத்தை பிரம்மாண்டமாக கட்டமைத்தனர். படம் வணிக ரீதியாக மோசமான தோல்வியை எதிர்கொண்டது.

தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கும் 'டிமான்ட்டி காலனி 2'  படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை வாங்கியுள்ள விநியோகஸ்தர் வருண், தான் படத்தை பார்த்து விட்டதாகவும், படம் எப்படி இருக்கிறது என்பதை அதிகபட்ச பாராட்டுகளுடன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“டிமான்ட்டி காலனி 2… வாவ் வாவ்... என்ன ஒரு திரைக்கதை அஜய் ஞானமுத்து ப்ரோ.

ஆகஸ்ட் 15ம் தேதி மொத்த இந்தியத் திரையுலகமும் உங்களது திரைக்கதை பற்றிப் பேசும்.

'மகாராஜா' படத்திற்குப் பிறகு இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கியது எங்களுக்கு அதிர்ஷ்டமே.

எனது வாழ்நாளில் இப்படி ஒரு ஹாரர் திரைப்படத்தை சீட்டின் நுனியில் அமர்ந்து பார்த்ததில்லை.,

மொபைல் போனை இரண்டரை மணி நேரமும் தொடவேயில்லை. பிரியா பவானி சங்கர் மீதான அனைத்து எதிர்மறையும், டிரோல்களும் இந்தப் படத்துடன் முடிந்துவிடும்.

இந்த ஸ்கிரிப்ட்டிற்குத் தேவையான அளவு அருள்நிதி அற்புதமாக நடித்திருக்கிறார். விமர்சகர்களுக்கு சாரி, இந்தப் படத்தில் இருந்து எப்படி ஒரு குறையைக் கண்டுபிடிக்கப் போகிறீர்கள்” என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாக உள்ள 'தங்கலான்', 'டிமான்ட்டி காலனி - 2' ஆகிய இரண்டு படங்களுக்கும் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பிம்பம் படங்களுக்கான முன்பதிவில் இல்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? – ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

‘கங்குவா’ டிரெய்லர்… ரசிகர்கள் ரியாக்‌ஷன் இதோ!

தமிழகத்தில் மனை, கட்டட மேம்பாட்டாளர்கள் திட்ட பதிவு: கட்டணம் எவ்வளவு?

அமெரிக்க அரசியல் குழப்பமும் அதன் சமூகப் பொருளாதாரமும்! பகுதி 1

Comments

Popular posts from this blog

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு ம...

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...