தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அதற்காக விழா நடத்துவது, கலைஞர்களை பாராட்டுவது, செய்தியாளர்களை சந்திப்பது வழக்கமான ஒன்று.
தங்கலான் படத்தின் கதாநாயகன் விக்ரம் இதில் இருந்து வித்தியாசமாக விருந்தோம்பல் நிகழ்ச்சி ஒன்றை தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்து திரைக்கலைஞர்களையும், தொழிலாளர்களையும், அவரது குடும்ப உறுப்பினர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
காடு, மலைகள் என கரடு முரடனான பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. எதிர்பார்த்த வெற்றியை இந்தப் படம் பெறவில்லை என்ற போதிலும் படம் உருவாக கடினமாக பணியாற்றிய அனைத்து நடிகர்கள், நடிகைகள், உதவி இயக்குநர்கள், கலை இயக்குநர்கள், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க படத்தின் கதாநாயகன் என்ற முறையில் நடிகர் விக்ரம் நேற்று விருந்தோம்பல் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதான வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த விருந்தில் பங்கேற்க வருகை தந்த 500-க்கும் மேற்பட்டவர்களை விக்ரம் வரவேற்றார்.
இந்த நிகழ்வில் விக்ரமுடன் 'தங்கலான்' படத்தில் நடித்த நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி, நடிகர் பசுபதி, படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் நேகா ஞானவேல் ராஜா, இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
-இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...
பாலியல் குற்றச்சாட்டு… நடிகர் முகேஷ் மீது வழக்குப்பதிவு!
பியூட்டி டிப்ஸ்: தொப்பையைக் குறைக்க பெல்ட் அணிபவரா நீங்கள்?
Comments
Post a Comment