Skip to main content

மகள் என்று அழைத்தார், திடீரென கல்யாணம் பண்ணிட்டார்! - பிரபல இயக்குநர் குறித்து வடிவுக்கரசி

இயக்குநர் பாலு மகேந்திரா தமிழில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வந்தவர். தமிழில் இவர் ஒளிப்பதிவு செய்த முதல் படம், முள்ளும் மலரும். ரஜினிகாந்த் நடித்த இந்த படம் சக்கை போடு போட்டது.  1979 ஆம் ஆண்டு இவர் இயக்கிய முதல் தமிழ் படம் "அழியாத கோலங்கள் ஆகும்.  மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, ரெட்டை வால் குருவி, சதிலீலாவதி, உள்ளிட்ட 15 படங்களை இயக்கியுள்ளார்.

இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார்.இயக்குனர் பாலா, வெற்றி மாறன் உள்ளிட்ட பலர் இவரின் பட்டறையில் உருவானவர்கள்.

பாலு மகேந்திரா அகிலா என்பவரை முதலில் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உண்டு. பிறகு நடிகை ஷோபாவை திருமணம் செய்துகொண்டார். ஷோபா 17 வயதில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, நடிகை மௌனிகாவுடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். ஆனால், பாலு மகேந்திராவுடன் இறுதிவரை வாழ்ந்தது நடிகை மௌனிகா தான். மௌனிகா பாலுமகேந்திராவை விட 30 வயது சிறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை ஷோபாவை அழித்த பாலு மகேந்திரா! மூடுபனி ஷூட்டிங்கில் நடந்தது என்ன? சீரியல் நடிகை பேட்டி | Actress Shanti Williams says that Actress Shoba life spoiled by Balu Mahendra ...

இந்நிலையில் நடிகை வடிவுக்கரசி பாலுமகேந்திரா குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியது அதிர்ச்சிரகமாக இருந்தது. வடிவுக்கரசி கூறியதாவது, "எனக்கு சினிமாவில் ஷோபாதான் முதல் தோழி . அவரை, கேகே நகரில் வசித்தபோது அடிக்கடி சந்திப்பேன். பசி படத்துக்காக அவர் தேசிய விருது பெற்றார். அப்போது, அவரை சந்தித்து வாழ்த்து சொல்ல சென்றேன். இந்த சமயத்தில்தான், அவர் பாலுமகேந்திராவை திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.

அது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஏனெனில் பாலுமகேந்திரா ஒருமுறை ஷோபாவுக்கு என் அன்பு மகளே என்று எழுதி கிஃப்ட் ஒன்றை கொடுத்தார். மகள் மாதிரி பழகிக்கொண்டு அவளையே திருமணம் செய்தது அதிர்ச்சியை கொடுத்தது" என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்.... 

-எம்.குமரேசன் 

அமைச்சரவை மாற்றமா? எனக்கு தகவல் வரலை – சிரித்த முதல்வர் ஸ்டாலின்

மூணெழுத்து மந்திரம்… ஆளப்போற தமிழன் : தவெக கொடிப்பாடலில் கொட்டிக்கிடக்கும் குறியீடுகள்!

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. லோகேஷ் தனது அபிமான நடிகரான...