Skip to main content

பியூட்டி டிப்ஸ்: மரு உதிர முடி கட்டுவது பயனளிக்குமா?

 


உதட்டுக்கு மேலோ, கன்னத்திலோ, கழுத்திலோ சின்னதாக ஒரு மச்சம் இருந்தால் அதை அழகு என கொண்டாடுகிறோம். அதுவே, மச்சத்துக்கு பதில் மரு வந்தால், கவலை கொள்கிறோம். எப்பாடு பட்டாவது அதை உடனே அகற்றிவிடத் துடிக்கிறோம்.

கடைகளில் விற்கப்படும் அமிலத்தன்மைமிக்க களிம்பை பூசுவது முதல் மருவை சுற்றி தலைமுடியை இறுக்கமாகக் கட்டி வைப்பது வரை வீட்டு சிகிச்சைகளை முயற்சி செய்வோரும் உண்டு. அதை எப்படி நீக்க வேண்டும்? சருமநல மருத்துவர்கள் கூறும் விளக்கம் என்ன?

"இது பெரும்பாலும் மரபியல் ரீதியாகவோ, ஹார்மோன்களின் சமநிலையின்மை காரணமாகவோ வருவது. இது பார்ப்பதற்கு மென்மையாக, குட்டி பலூன் போல இருக்கும். மிகச் சிறிய அளவிலிருந்து, பெரிதாக தொங்கும் அளவு வரை இது அளவில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

முகம், அக்குள், கழுத்து, தொடையிடுக்கு என சதை மடிப்புகள் உள்ள இடங்களில் இது அதிகம் வரும். கழுத்தில் செயின் அணிந்திருக்கும் சிலருக்கு அந்த உராய்தல் காரணமாக வரலாம். நீரிழிவு உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் பாதிப்பதைப் பார்க்கலாம்.

மருவைப் பிய்த்து எடுப்பதால், அது இன்னும் அதிகமாகப் பரவும். இது வைரஸ் தொற்று என்பதால் நம் உடலிலும் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் பரவும்.

நம்மிடமிருந்து மற்றவர்களுக்கும் பரவும். மருவை அகற்றினால், மீண்டும் வருமா என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கிறது.

பெரும்பாலும் வர வாய்ப்பில்லை என்றாலும், நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்கள், நீரிழிவு உள்ளவர்கள் போன்றோருக்கு அது மீண்டும் வரலாம்.

சின்னதாக இருக்கும்போதே மருவை நீக்க முறையான சிகிச்சை பெறுவதுதான் சிறந்தது. மருக்களை நீக்க, ஆசிட் வைப்பது போன்ற  வீட்டு சிகிச்சைகளைப் பின்பற்றுவது  ஆபத்தானது.

மருவைச் சுற்றி இறுக்கமாக முடி கட்டும் வழக்கம் இன்னும் சிலரிடம் இருக்கிறது. அப்படிச் செய்தால் அந்த இடத்தில் ரத்த ஓட்டம் தடைப்பட்டு மரு உதிர்ந்துவிடும் என்று நம்புகிறார்கள்.

இத்தகைய சிகிச்சைகள் எல்லாம் பிரச்னையை மேலும் தீவிரமாக்கலாம், இன்ஃபெக்‌ஷனை ஏற்படுத்தலாம். எனவே, சரும மருத்துவரை அணுகுவது நல்லது.

மருவின் மீது மட்டும் தடவும்படியான திரவ மருந்தை மருத்துவர் பரிந்துரைப்பார். இரவில் அதை மருவின் மேல் தடவிவிட்டு, மறுநாள் காலையில் கழுவிவிட வேண்டும். அது மெள்ள மெள்ள மென்மையாக மாறும்.

பிறகு சரும மருத்துவர் அதை ரேடியோ ஃப்ரீக்வன்சி (Radio Frequency) அல்லது எலக்ட்ரோகாட்டரி (Electrocautery) சிகிச்சையின் மூலம் முற்றிலும் அகற்றிவிடுவார்.

லிக்விட் நைட்ரஜன் பயன்படுத்திச் செய்யப்படுகிற க்ரையோதெரபி (Cryotherapy) மூலமாகவும் வைரஸின் மூலம் பரவும் மருக்களை நீக்கலாம்."

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

டாப் 10 நியூஸ் : பொன்முடி வழக்கு விசாரணை முதல் வேட்டையன் அப்டேட் வரை!

கிச்சன் கீர்த்தனா : ஹெல்த்தி உருண்டை

இது என்னடா புது உருட்டா இருக்கு: அப்டேட் குமாரு

நுனக்குழி : விமர்சனம்!

Comments

Popular posts from this blog

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

விமர்சனம் : மழை பிடிக்காத மனிதன்!

  உதயசங்கரன் பாடகலிங்கம் கவிதைக்காரனா? ஆக்‌ஷன் ஹீரோவா? தமிழ் திரையுலக நாயகர்களில் சிலரது படங்கள் நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்று சொல்லத்தக்கதாக இருக்கும். அப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்கும் அளவுக்கு, அவர்களது முந்தைய படங்கள் ரசிகர்களிடத்தில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கும். அந்த வகையில் விஜய் ஆண்டனியின் படங்கள் என்றாலே நிச்சயம் வழக்கத்திற்கு மாறான கமர்ஷியல் பட அனுபவத்தைப் பெறலாம் என்று தாராளமாகச் சொல்லலாம். அந்த வரிசையில், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’ தற்போது ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்தப் படமும் வழக்கமான விஜய் ஆண்டனி படம் போல அமைந்திருக்கிறதா? நல்லதொரு கமர்ஷியல் படம் பார்த்த திருப்தியைத் தருகிறதா? எப்படிப்பட்ட காட்சியனுபவத்தைத் தருகிறது ‘மழை பிடிக்காத மனிதன்’? கவிதையாய் சில காட்சிகள்! ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற டைட்டிலை கேட்டவுடன் நமக்குள் என்ன மாதிரியான கதை தோன்றும்? மழையை ஆராதிப்பதுதான் சினிமாவுலக நாயக, நாயகிகளின் வழக்கம். அப்படிப்பட்ட மழையை வெறுக்கத்தக்க அளவுக்கு, நாயகனின் வாழ்வில் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்திரு...