Skip to main content

தயாரிப்பாளர் சங்கம் Vs நடிகர் சங்கம்... முற்றும் மோதல்... காரணம் இதுதானா?

 தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்களின் சம்பளம் மற்றும் படப்பிடிப்புக்கான தேதி ஒதுக்கீட்டில் ( கால்ஷீட் ) நடைபெறும் குளறுபடி காரணமாக தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதனால் நவம்பர் 1 ஆம் தேதியில் இருந்து திரைப்பட தயாரிப்பு வேலைகள் எதுவும் நடத்தக்கூடாது என்று புதிதாக அமைக்கப்பட்டுள்ள திரைப்பட சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஜூலை 29 ஆம் தேதி அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்தது.

இதற்கு அன்று இரவே தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்து மறுப்பு அறிக்கையொன்றை வெளியிட்டு சங்கத்தின் பெருளாளர் நடிகர் கார்த்தி செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். இந்த நிலையில் நேற்று கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ஜூலை 29 அன்று தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், "நடிகர் தனுஷ்  மீது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த வித புகாரும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.

அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. ஏனெனில், ஓராண்டுக்கு முன்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவில் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சனை மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுத்தும் முக்கிய 5-நடிகர்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தகவல் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் தெரியப்படுத்திய தகவல் அப்பொழுது அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.

மேலும், கடந்த ஓராண்டு காலமாக தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அவர்களுக்கு மேற்படி விஷயம் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. ஆனால், தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த பிரச்சனை சம்பந்தமாக தயாரிப்பாளர்களுக்கு எந்தவிதமான தீர்வும் ஏற்படுத்தி தரவில்லை.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் நலனை காக்கவே இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், தயாரிப்பாளர்களுக்கு உள்ள பிரச்சனைகளை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விவாதித்து தீர்வு காண்பது சங்கத்தின் கடமையாகும்.

அதே போல் நவம்பர் 1 முதல் படப்பிடிப்புகள் முழுமையாக நிறுத்தி திருத்தி அமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் (New Guideline) படப்பிடிப்பு பணிகளை தொடர தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அடங்கிய கூட்டமைப்பு (Joint Action Committee) எடுத்துள்ள முடிவிற்கு தாங்கள் கண்டனம் தெரிவித்துள்ளீர்கள்.

இன்றைய சூழ்நிலையில் பணத்தை முதலீடு செய்யும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள், தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரை பெரும் பொருளாதார இழப்பிலிருந்து பாதுகாத்து திரைத்துறையையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு உள்ளது. ஆகையால்தான் கூட்டமைப்பு கூட்டத்தினை கூட்டி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு, அந்த வரிசைப்படித்தான் நடித்துக் கொடுத்து வருவது என்பது காலங்காலமாக இருந்து வரும் மரபு. அவ்வாறு இல்லாமல் புதிதாக திரைப்படம் எடுக்க வருபவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, ஏற்கனவே பணம் கொடுத்தவர்களுக்கு நடித்து கொடுக்காமல் மற்றவர்களுக்கு நடித்து கொடுப்பது எந்தவிதத்தில் நியாயமாகும்? இப்படி இக்கட்டான சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் கூட்டமைப்பின் மூலம் அறிவிக்கப்பட்ட அறிக்கை தவறானது கண்டனத்திற்குரியது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கூறியிருப்பதை வாபஸ் பெற வேண்டும்.

தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இனி ஒப்பந்தம் செய்துகொண்டுதான் படம் நடிக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளீர்கள். எங்களது தயாரிப்பாளர்கள் தரப்பிலும் கால்ஷீட் நாட்களை குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்து கொடுங்கள் என்று கேட்கின்றோம். ஆனால், நடிகர்கள் அதனை பொருட்படுத்தவில்லை என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களை எப்படி நீங்கள் பாதுக்காக்கிறார்களோ அதே போல்  எங்களது சங்க உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கும் உள்ளது.

நடிகர்கள் சம்பளம் மற்றும் படப்பிடிப்பு செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்ற காரணத்தினால், மேலும் மேலும் நஷ்டத்தினை எதிர்கொள்ள தயாரிப்பாளர்களால் இயலவில்லை. மேலும், கடந்த 6-மாத காலத்தில் தயாரிப்பாளர்கள், தங்களது திரைப்படங்களை வியாபாரம் செய்ய இயலாமல் தொலைக்காட்சி, ஓடிடி என அனைத்து வியாபார தளங்களிலும் பொருளாதார ரீதியாக மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவதை கருத்தில் கொண்டு அவர்களை காப்பாற்றிடவும்.

எதிர்கால தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் மேற்கண்ட தீர்மானங்கள் கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏற்கனவே கூட்டமைப்பின் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தீர்மானத்தை அமல்படுத்துவதில் மூன்று சங்கங்களும் உறுதியாக உள்ளது. இதனை புரிந்து கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கமும் தகுந்த ஒத்துழைப்பு வழங்கும் என்று உறுதியாக நம்புகிறோம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள் சிலரிடம் பேசிய போது, "தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் நலனுக்காக கூட்டு நடவடிக்கை குழு உறுதியாக எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்க கூடியதே. சாமானிய தயாரிப்பாளர்கள் நடிகர்களால் பாதிக்கப்படும் போது அதற்கு தீர்வு காண சங்கம் எந்த முயற்சியும் எடுத்தது இல்லை.

தற்போது சங்கத்தின் உறுப்பினாராக உள்ள நடிகர் தனுஷ் அவர்களை குறிப்பிட்டு முடிவு எடுப்பதும், அறிக்கை வெளியிடுவதும் நிர்வாகிகள் சிலரின் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள தனுஷ் அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகவே கருத வேண்டியுள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ராமசாமி தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்த படம் முடிவடையாமல் முடங்கியுள்ளது. சங்கத்தின் கெளரவ செயலாளர் ஒருவர் தனுஷ் கால்ஷீட் கேட்டு கொடுக்கவில்லை அதனால் எழுந்த கோபம் அனைத்தும் சேர்ந்து தனுஷ் முன்னிலைப்படுத்தபடுகிறார்” என்றனர்.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஹாலிவுட்டில் ‘ராயன்’ சாதனை… தனுஷுக்கு கிடைத்த வேற லெவல் அங்கீகாரம்!

கரைபுரண்டு ஓடும் காவிரி… களைகட்டும் ஆடிப்பெருக்கு!

பிடிவாதத்தின் எல்லைகளை உடைத்துவிடுங்கள்

யாழி சிற்பங்கள்… வண்ண விளக்குகள்… புதுப்பிக்கப்பட்ட அண்ணா மேம்பாலம் !

ஜமா: விமர்சனம்!

வேலைவாய்ப்பு : வங்கிகளில் பணி – ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46

Comments

Popular posts from this blog

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு முக்கியமான வேலை

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம் நினைவுகளை விட்டு நீங்காத சுமை ! ’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம். தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது. அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர். சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக

போகுமிடம் வெகுதூரமில்லை : விமர்சனம்!

ஒரு பயணத்தில் பல தீர்வுகள்! தமிழ் சினிமாவில் நல்லதாகச் சில படங்கள் தந்தும், ‘சிறந்த கலைஞர்’ என்ற பெயரைப் பெற்றும், சிலருக்குப் பெரிதாக வெற்றிகள் வாய்க்காமல் இருக்கும். ’நல்லதாகச் சில வாய்ப்புகள் அமைந்தால் நன்றாக இருக்குமே’ என்று ரசிகர்களே நினைக்கும்படியாக அவர்களது சினிமா வாழ்வு இருக்கும். அப்படியொருவராகத் திகழ்பவர் நடிகர் விமல். ‘பசங்க’ தொடங்கி ‘களவாணி’, ‘தேசிங்குராஜா’ என்று மேலே பறந்த அவரது கொடி சிலகாலம் தாழ்வாகப் பறந்தது. தற்போது மீண்டும் அவரது இன்னிங்ஸ் தொடங்கியிருக்கிறது. அதனை வெளிக்காட்டுவதாக இருந்தது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பட ட்ரெய்லர். இந்தப் படத்தில் அவருக்கு இணையான பாத்திரத்தில் கருணாஸும் இருக்கிறார். மைக்கேல் கே.ராஜா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்.ஆர்.ரகுநந்தன். எப்படி இருக்கிறது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’?! இரு துருவம்.. ஒரு பயணம்..! சென்னையிலுள்ள மருத்துவமனையொன்றில் அமரர் ஊர்தி டிரைவராக இருந்து வருகிறார் குமார் (விமல்). பெற்றோரைச் சிறு வயதில் இழந்த அவருக்கு தாத்தா மட்டுமே ஒரே துணை. ஒருநாள் தற்செயலாகக் குமார் கலையழகியைச் (மேரி ரிக்கெட்ஸ்) சந்திக்