2023-24ஆம் நிதியாண்டில் அதிக வரி செலுத்திய பிரபலங்கள் பட்டியலை ஃபார்சூன் இந்தியா நிறுவனம் நேற்று (செப்டம்பர் 4) வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் தளபதி விஜய் 2வது இடம் பிடித்துள்ளார். அவர் கடந்த நிதியாண்டில் ரூ.80 கோடி வரிப்பணமாக அரசுக்கு செலுத்தியுள்ளதாக ஃபார்சூன் இந்தியா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த 2023-24 நிதியாண்டு காலகட்டத்தில் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'லியோ' படத்தில் மட்டுமே நடித்துள்ளார்.
சுமார் ரூ.300 கோடி பொருட்செலவில் 'லியோ' படம் தயாரான நிலையில், பாக்ஸ் ஆபீஸில் அப்படம் சுமார் ரூ.620 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்திற்காக நடிகர் விஜய் ரூ.120 கோடி ஊதியமாக பெற்றதாக தகவல் வெளியானது.
இதை தொடர்ந்து, 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியை துவங்கிய விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில், 'தி கோட்' (The Greatest of All Time) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 5 உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
இந்த படம் சுமார் ரூ.400 கோடி பொருட்செலவில் தயாராகியுள்ளதாக, படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்த நிலையில், நடிகர் விஜய்க்கு மட்டும் ரூ.200 கோடி ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபார்சூன் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அதிக வரி செலுத்தும் நடிகர்கள் பட்டியலில் விஜய் 2வது இடத்தை பிடித்துள்ள நிலையில், நடிகர் ஷாரூக் கான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் ரூ.95 கோடி வரிப் பணம் செலுத்தியுள்ளார்.
சல்மான் கான் இப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார். அவர் ரூ.75 கோடி வரிப் பணமாக செலுத்தியுள்ளார்.
ரூ.71 கோடி வரி செலுத்தியுள்ள அமிதாப் பச்சன் இப்பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ளார்.
அஜய் தேவ்கன் ரூ.42 கோடி வரிப்பணம் செலுத்தி இப்பட்டியலில் 5வது இடம் பிடித்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர்களில், தலா ரூ.14 கோடி வரியாக செலுத்தி, மோகன் லால் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
நடிகைகளில், அதிகப்படியாக கரீனா கபூர் ரூ.20 கோடி வரிப்பணமாக செலுத்தியுள்ளார்.
அவரை தொடர்ந்து கியாரா அத்வானி ரூ.12 கோடி வரிப்பணமாக செலுத்தியுள்ளார்.
கத்ரீனா கைஃப் ரூ.11 கோடி வரிப்பணமாக செலுத்தியுள்ளார்.
- மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...
Aus vs Sco: டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியா
கோலியா? தோனியா? அதிக வரிப் பணம் செலுத்தும் கிரிக்கெட் வீரர் யார்?
வேலைவாய்ப்பு : பெல் நிறுவனத்தில் பணி!
Paralympics 2024: மீண்டும் 4 பதக்கங்கள்… ஹர்விந்தர் சிங், தரம்பீர் புதிய சாதனை!
Comments
Post a Comment