நடிகை சனம் ஷெட்டி தொலைபேசி மூலமாகப் பணம் பறிக்கும் ஒரு கும்பலிடம் தனக்கு வந்த அழைப்பைப் பற்றி எக்ஸ் தளத்தில் நேற்று மாலை ஒரு காணொலி வெளியிட்டுள்ளார். நடிகை சனம் ஷெட்டி மஹா, ஊமை செந்நாய், கதம் கதம் போன்ற தமிழ்ப் படங்களிலும், ஒரு சில மலையாளம், தெலுங்கு, மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். 2020-ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இவருக்குச் சமீபத்தில் பணம் பறிக்கும் ஒரு கும்பலிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அதைப் பற்றி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் நேற்று மாலை ஒரு காணொலி பதிவேற்றியுள்ளார். அதில் “ நான் இன்று ஒரு ஆன்லைன் ஃபிஷிங்க் காலுக்கு விக்டிம் ஆகிட்டேன். நானே பலருக்கு உங்களின் விபரங்களைக் கேட்டு தொலைப்பேசி அழைப்பு வந்தால், கொடுக்காதீர்கள் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் எனக்கே அப்படிப்பட்ட அழைப்பு ஒன்று வந்தது. அழைப்பின் மறுமுனையில் பேசிய பெயர் குறிப்பிடாத நபர், உங்களின் தொலைபேசி எண், இன்னும் இரண்டு மணி நேரத்தில் செயலிழக்கப் போகிறது, அதன் மீது 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். நான் பதற்றத்துடன் ஏன்? என்று கேட்டேன். அதற்கு அந்த நபர், நீ...