Skip to main content

பஞ்சாயத்துக்கு வராத கமல்... லிங்குசாமி ஏமாற்றம்!

 ’உத்தம வில்லன்’ படம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு நடிகர் கமல்ஹாசன் நேற்று (மே 10) வராததால் இயக்குநர் லிங்குசாமி தரப்பினர் ஏமாற்றம் அடைந்தனர்.

நீண்ட ஒப்பந்த உடன்பாட்டு சர்ச்சைகளுக்கிடையே லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது. வணிக ரீதியாக அப்படம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.

இதனையடுத்து உத்தம வில்லன் திரைப்படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு புதிய படத்தில் நடித்துக் கொடுப்பதாக கமல்ஹாசன் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு உறுதி அளித்திருந்தார்.

ஆனால், 9 ஆண்டுகள் ஆகியும், ஒப்புக்கொண்டபடி தங்களது தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்காமல் இழுத்தடிப்பதாகவும், தங்களுக்கு நீதி வேண்டும் என்றும் திருப்பதி பிரதர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் நீண்ட கடிதத்துடன் புகார் அளிக்கப்பட்டது.

அதனை ஏற்று, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் புகார் குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டது. பின்னர், பேச்சுவார்த்தை நடத்த கமல்ஹாசனுக்கும் மற்றும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் லிங்குசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட நிலையில், லிங்குசாமி தரப்பினர் வந்தனர். ஆனால் நடிகர் கமல்ஹாசன் வரவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த லிங்கசாமி, கமலிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யுமாறு தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை விடுத்து ஏமாற்றத்துடன் சென்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கிறிஸ்டோபர் ஜெமா

டாப் 10 செய்திகள் : கெஜ்ரிவால் ரோடு ஷோ முதல்… சூரிய காந்த புயல் எச்சரிக்கை வரை!

கிச்சன் கீர்த்தனா : காளான் லசானியா

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. லோகேஷ் தனது அபிமான நடிகரான...