Skip to main content

கிச்சன் கீர்த்தனா : காளான் லசானியா

 அசைவ விரும்பிகளுக்கு மட்டுமன்றி, சைவ விரும்பிகளுக்கும் பிடித்த ஓர் உணவு காளான். அதில் விதம்விதமான உணவுகள் தயாரிக்கலாம் என்பதே பலருக்கும் தெரியாது. அபரிமிதமான ஊட்டச்சத்துகள் கொண்ட காளானில் வித்தியாசமாக சமைத்து இந்த வார வீக் எண்டை ஸ்பெஷலாக்குங்கள். அதற்கு இந்த இத்தாலிய உணவான காளான் லசானியா ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?
காளான் - 200 கிராம் (மிகவும் சிறிதாக நறுக்கவும்)
நறுக்கிய குடமிளகாய் - ஒரு கப்
நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு கப்
தக்காளி - 6 (நறுக்கவும்)
மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
ஒரிகானோ - ஒரு டேபிள்ஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் - அரை ஸ்டீபூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
பூண்டு - 6 பல் (நறுக்கவும்)
பீட்சா சாஸ் - 8 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
மயோனைஸ் - 3 டேபிள்ஸ்பூன்
துருவிய சீஸ் - 3 கப்
உப்பு - ஒன்றேகால் டேபிள்ஸ்பூன்

லசானியா ஷீட் தயாரிக்க:
மைதா - ஒன்றரை கப்
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
வெஜிடபிள் ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - அரை டேபிள்ஸ்பூன்
வெதுவெதுப்பான பால் - ஒரு கப்

அலங்கரிக்க:
ஒரிகானோ - சிறிதளவு

எப்படிச் செய்வது?
மைதா மாவை எண்ணெய், வெண்ணெய், அரை டேபிள்ஸ்பூன் உப்பு கலந்து பால் ஊற்றி பரோட்டா மாவைப் போல் நன்றாக அடித்து மாவு மென்மையாகும் அளவுக்குப் பிசையவும். மாவின் மேற்பரப்பில் எண்ணெய் தடவி ஈரத் துணியால் மூடி வைக்கவும். கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய காளான், தக்காளி, குடமிளகாய், பூண்டு, வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்து மிளகுத்தூள், ஒரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ், காஷ்மீரி மிளகாய்த்தூள், முக்கால் டேபிள்ஸ்பூன் உப்பு கலந்து ரொம்பவும் வதக்காமல், கிரிஸ்பியாக இருக்கும்படியாக லேசாக வதக்கி எடுத்து ஆறவைக்கவும்.

மைதா மாவை மூன்று பிரிவுகளாகப் பிரித்து நம்மிடம் உள்ள பேக்கிங் பான் (pan) வடிவத்துக்கு மெல்லிய ஷீட்களாக உருட்டி சற்றே காற்றில் உலர வைக்கவும். இப்போது பேக்கிங் பான் (baking pan) மேற்பரப்பில் வெண்ணெய் தடவி அதன் மேல் ஒரு 2 டேபிள்ஸ்பூன் பீட்சா சாஸ் பரப்பவும். அதன் மேல் ஒரு பிரஷ்ஷினால் ஆலிவ் ஆயில் தடவவும். அதன் மேல் நாம் தயாரித்த மூன்று ஷீட்களில் ஒன்றைப் பரப்பி ஒரு டேபிள்ஸ்பூன் மயோனைஸ், 2 டேபிள்ஸ்பூன் பீட்சா சாஸ், ஒரு லேயர் நாம் கடாயில் தயாரித்த ஃபில்லிங், அதற்கு மேல் ஒரு கப் துருவிய சீஸ் போடவும். மீண்டும் இரண்டு ஷீட் லேயர்களையும் இதே வரிசையில் பரப்பி கடைசியில் உள்ள சீஸ் லேயர் மேல் ஒரிகானோ தூவவும். இதை 180 டிகிரி செல்ஷியஸுக்கு பிரீஹீட் செய்யப்பட்ட அவனில் (oven) வைக்கவும். 200 டிகிரி செல்ஷியஸில் 20-ல் இருந்து 25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அவகாசம் கேட்கும் எஸ்.பி…. சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறதா நெல்லை கொலை வழக்கு?

கொஞ்சம் டிவி, கொஞ்சம் மொபைல்: அப்டேட் குமாரு

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. லோகேஷ் தனது அபிமான நடிகரான...