Skip to main content

பியூட்டி டிப்ஸ்: சமையல் பொருள்களைச் சருமத்தில் தடவுவது நல்லதா? கெட்டதா?

 ஊடகங்களில் வெளியாகும் பியூட்டி டிப்ஸ்களைப் படித்துவிட்டு, சிலர் சமைக்கும்போது, சமையலுக்குப் பயன்படுத்தும் பொருட்களில் எதையாவது எடுத்து முகத்தில் தடவிக் கொள்வார்கள். உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சைச் சாறு, தயிர், புதினா சாறு... இப்படி எதையும் விட்டு வைக்க மாட்டார்கள்.

இவை எல்லாமே சரும ஆரோக்கியத்துக்கு உதவும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கும். இந்த விஷயம் எந்த அளவுக்குச் சரியானது... சமையலுக்கான அனைத்துப் பொருட்களையும் நேரடியாக சருமத்தில் தடவுவது நல்லதா? கெட்டதா? சருமநல மருத்துவர்கள் சொல்லும் பதில் என்ன?

"சமையலுக்கான பொருட்களை முகத்தில் தடவிக் கொள்வது நல்லதா, கெட்டதா என்று கேட்கும் நிலையில் சிறுநீரை முகத்தில் தடவினால், சருமத்தின் ஈரப்பதம் தக்க வைக்கப்படும் என்றொரு நம்பிக்கை பரவிக்கொண்டிருக்கிறது. அதை நம்பி, பலரும் தங்களது சிறுநீரையே முகத்தில் தடவிக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட விநோதங்களும் இங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

யூரியா என்பது  நீர்ச்சத்துக்கு காரணமானது. குறிப்பிட்ட சதவிகிதம் யூரியா உள்ள கான்சென்ட்ரேஷன், நம் சருமத்தின் ஈரப்பதம் குறையாமல், அதைத் தக்க வைக்கும். அதையும் இதையும் பொருத்திப் பார்த்து, தங்களது சிறுநீரையே மாய்ஸ்ச்சரைசராக உபயோகிக்கும் கூட்டம் ஒன்று இருக்கிறது.

எனவே, எல்லா பொருட்களும் நம் சருமத்துக்குப் பொருத்தமானவை என்று சொல்ல முடியாது. இப்படி ஒவ்வாத பொருட்களால் ஏற்படும் அலர்ஜியை சரும மருத்துவத்தில், 'அலர்ஜிக் கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்' (Allergic contact dermatitis) என்று சொல்வோம்.

எலுமிச்சைப்பழம், புளி, கிராம்பு போன்றவற்றில் இயல்பிலேயே ஒவ்வாமையை ஏற்படுத்தும் தன்மை இருக்கும். எனவே, இப்படி உள்ளுக்குச் சாப்பிடுகிற எல்லாவற்றையும் சருமத்தில் அப்ளை செய்வது ஆரோக்கியமான விஷயமல்ல.

சருமத்தின் அழகையும் இளமையையும் தக்கவைக்க வேண்டுமானால், நிறைய காய்கறிகள், பழங்களை உள்ளுக்குச் சாப்பிடுங்கள். அவற்றையெல்லாம் சருமத்துக்குப் பயன்படுத்தி, சிக்கலை வரவழைத்துக் கொள்ளாதீர்கள். சருமப் பராமரிப்பு என்ற விஷயத்தை எளிதாக வைத்துக் கொள்ளுங்கள்.

உள்ளே சாப்பிடும் காய்கறி, பழங்களில் ஒன்றிரண்டு வேண்டுமானால் பிரச்சினையை ஏற்படுத்தாமல் இருக்கலாம். அவையும் உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று அர்த்தமில்லை. சருமத்தில் அப்ளை செய்தாலும் பாதிப்பை ஏற்படுத்தாதவை என்று புரிந்துகொள்ளுங்கள். அந்த வகையில் தயிர், தேன், ஓட்ஸ் போன்றவற்றை சருமத்தில் தடவிக்கொள்வதால் பிரச்சினைகள் வராது.

ஒரு ஃபேஸ்பேக்கோ, ஆயில் மசாஜோ செய்துகொண்டு காத்திருக்கும் அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ உங்களுக்கு ஒருவித ரிலாக்ஸிங் மனநிலையைத் தரும்பட்சத்தில் அவற்றைச் செய்து கொள்ளலாம். அந்த நல்ல உணர்வுக்காக இப்படிப்பட்ட வீட்டு சிகிச்சைகளை வாரம் ஒரு முறையோ, பத்து நாள்களுக்கு ஒரு முறையோ செய்து கொள்ளலாம்.

மற்றபடி அவை பலன் தரும் என்று நம்பாதீர்கள். அப்படி உங்கள் மனநிலைக்காக நீங்கள் தேர்வுசெய்கிற பொருட்களும் பாதுகாப்பானவையாக  இருக்கட்டும். எலுமிச்சை, புதினா என கிடைக்கும் எல்லாவற்றையும் சருமத்தில் தடவாதீர்கள்" என்று எச்சரிக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கிச்சன் கீர்த்தனா: நாவல் பழ அல்வா

அப்டேட் குமாரு

தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி ஏழைகளிடம் அபராதம் வசூலிப்பதா?: ராகுல் காட்டம்!

யுபிஏ ஆட்சியில் எல்லா மாநிலங்களின் பெயர்களையும் சொன்னீர்களா?: நிர்மலா சீதாராமன் கேள்வி!

https://telegra.ph/ https://rentry.co/hsoe5sa3 https://rentry.co/6uimis36 http://minnambalam.webflow.io/ http://minnambalacom.webflow.io/ https://telegra.ph/ppt-07-22 https://paste.intergen.online/view/ae7448ac https://dictanote.co/n/1040281/ https://sharetext.me/sddsi20xj9 https://sharetext.me/wlgcbdbhgb https://etextpad.com/mvku4tuuca https://telegra.ph/A12-07-22 https://telegra.ph/A13-07-22 https://telegra.ph/ASRB-07-22 https://ivpaste.com/v/TgSKM7emAb https://bitbin.it/v3KB2wjg/ https://bitbin.it/hhtZtsMn/ https://paste.toolforge.org/view/a8628cd3 https://paste.toolforge.org/view/c18403c4 https://yamcode.com/news-67688 https://yamcode.com/prabha19771977 https://telegra.ph/News-07-29-57 https://rentry.co/vbhmgi9p https://paste.intergen.online/view/961901f3#L129 https://dictanote.co/#/n/1/ https://sharetext.me/5hmgiihchb https://etextpad.com/hhg1vveij5 https://ivpaste.com/v/0n6SJsa6VY https://bitbin.it/7m6r4rqV/ https://paste.toolforge.org/view/7af48dba https://yamcode.com/prabha19771977-2 https://rentry.co/9f5ffs48 https://telegra.ph/New-News-07-31 https://paste.intergen.online/view/74b4442a https://dictanote.co/#/n/2/ https://sharetext.me/kw2ppirygh https://etextpad.com/2uclstmiz9 https://ivpaste.com/v/bTwojvCYSq https://bitbin.it/cmu5IWhP/ https://paste.toolforge.org/view/c5146582 https://yamcode.com/prabha19771977-3 https://telegra.ph/new-news1-08-02 https://rentry.co/2k6r88od https://paste.intergen.online/view/010d2e34 https://dictanote.co/#/n/3/ https://sharetext.me/ltljmfgs6g https://etextpad.com/ag1vryij4n https://ivpaste.com/v/0WrlKP2tVd https://bitbin.it/RFUZwQpj/ https://paste.toolforge.org/view/0e8a4f88 https://yamcode.com/prabha19771977-4 http://logistik.lebedevgroup.com/blog/razdel-1/blog-3/ https://minnambalamcom.blogspot.com/ https://minnambalam.com/

cooking ingredients on the skin

Comments

Popular posts from this blog

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு முக்கியமான வேலை

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம் நினைவுகளை விட்டு நீங்காத சுமை ! ’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம். தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது. அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர். சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக

போகுமிடம் வெகுதூரமில்லை : விமர்சனம்!

ஒரு பயணத்தில் பல தீர்வுகள்! தமிழ் சினிமாவில் நல்லதாகச் சில படங்கள் தந்தும், ‘சிறந்த கலைஞர்’ என்ற பெயரைப் பெற்றும், சிலருக்குப் பெரிதாக வெற்றிகள் வாய்க்காமல் இருக்கும். ’நல்லதாகச் சில வாய்ப்புகள் அமைந்தால் நன்றாக இருக்குமே’ என்று ரசிகர்களே நினைக்கும்படியாக அவர்களது சினிமா வாழ்வு இருக்கும். அப்படியொருவராகத் திகழ்பவர் நடிகர் விமல். ‘பசங்க’ தொடங்கி ‘களவாணி’, ‘தேசிங்குராஜா’ என்று மேலே பறந்த அவரது கொடி சிலகாலம் தாழ்வாகப் பறந்தது. தற்போது மீண்டும் அவரது இன்னிங்ஸ் தொடங்கியிருக்கிறது. அதனை வெளிக்காட்டுவதாக இருந்தது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பட ட்ரெய்லர். இந்தப் படத்தில் அவருக்கு இணையான பாத்திரத்தில் கருணாஸும் இருக்கிறார். மைக்கேல் கே.ராஜா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்.ஆர்.ரகுநந்தன். எப்படி இருக்கிறது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’?! இரு துருவம்.. ஒரு பயணம்..! சென்னையிலுள்ள மருத்துவமனையொன்றில் அமரர் ஊர்தி டிரைவராக இருந்து வருகிறார் குமார் (விமல்). பெற்றோரைச் சிறு வயதில் இழந்த அவருக்கு தாத்தா மட்டுமே ஒரே துணை. ஒருநாள் தற்செயலாகக் குமார் கலையழகியைச் (மேரி ரிக்கெட்ஸ்) சந்திக்