Skip to main content

"மாலிவுட்டில் மட்டும் தான் பெண்களுக்கு பிரச்சனையா?" - நடிகர் டொவினோ தாமஸ்

மலையாளத் திரைத்துறையில் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற கருத்து தவறு என மலையாள நடிகர் டொவினோ தாமஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக மலையாள திரைத்துறையில் இருந்து பல்வேறு திடுக்கிடும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அனைத்திற்கும் முக்கிய காரணம் நீதிபதி ஹேமா கமிட்டி. தொடர்ந்து உச்ச நட்சத்திரங்கள் தொடர்ந்து பல்வேறு திரைப் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இதுகுறித்து மலையாள நடிகர் டொவினோ தாமஸ் பேசுகையில், " குற்றம் சாட்டப்பட்டவர் இந்த விவகாரத்தில் இருந்து விலகி இருப்பது பாரபட்சமற்ற விசாரணைக்கு உதவும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். அது தான் உரிய நெறியாகும். அரசு நியமித்துள்ள விசாரணைக் குழு தேவைப்பட்டால் அறிக்கை வெளியிடும். தான் வேலை செய்யும் இடத்தில் அனைவரும் பாதுகாப்பாக உணர வேண்டும்.

பெண்கள் அனைத்து வேலைகளிலும் பாதுகாப்பற்ற சூழலை சந்தித்து வருகின்றனர். அனைத்தும் மாற வேண்டும். விசாரணை நடத்த தான் இங்கு சட்டங்களும், நீதிமன்றங்களும் இருக்கின்றன. நடிகைகளுக்கான பாலியல் தொல்லைகள் மலையாள திரைத்துறையில் மட்டுமே உள்ளது எனக் கூறுவது தவறு. இங்கு விசாரணை நடத்தப்பட்டதால் வெளியே தெரிகிறது. அனைத்து விதமான துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அதுகுறித்து தகுந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும் " எனப் பேசினார்.

டொவினோ தாமஸ் தற்போது ' அஜயண்டே ரண்டே மோஷனம் ' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற ஓணம் பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதில், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் தேற்பொய்து வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

- ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவர் இறந்து விட்டது போல நாடகம்… சிக்க வைத்த கழுத்து!

ஸ்டாலின் வெளிநாடு பயணம்… “துரைமுருகனுக்கு இடைக்கால முதல்வர் பதவி” – சீமான் டிமாண்ட்!

உன் கணவர் வெளிநாட்டுல… இங்கே தனியாக என்ன செய்வாய்? – நடிகையிடம் நைசாக கேட்ட பூவிழி வாசலிலே பட நடிகர்!

ஜம்மு காஷ்மீர் தேர்தல்… முதல் கட்ட பாஜக வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்!

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. லோகேஷ் தனது அபிமான நடிகரான...