Skip to main content

ஹெல்த் டிப்ஸ்: தினமும் வாழைப்பழம் சாப்பிடுபவரா நீங்கள்... உங்களுக்கு ஏற்ற பழம் எது?

 எல்லோருக்கும் எளிதாகவும் வருடத்தின் எல்லா நாள்களிலும் கிடைக்கக்கூடியது வாழைப்பழம். தினமும் பழம் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்களும் ஊட்டச்சத்து ஆலோசகர்களும் அறிவுறுத்தும் நிலையில், பலரின் சாய்ஸும் வாழைப்பழமாகவே இருக்கிறது.

தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதை கடமையாகவே பின்பற்றுவோர் உண்டு. வாழைப்பழம் சாப்பிட்டால்தான் காலைக்கடனை சிரமமின்றி கழிக்க முடிவதாக உணர்வோரும் உண்டு. இந்த நிலையில் யாருக்கு... எந்தப் பழம் ஏற்றது?

கற்பூரவல்லி: கர்ப்பிணிகளுக்கான பழம் என்றே இதைச் சொல்லலாம். இதில் உள்ள ஃபோலிக் அமிலம், குழந்தைகளின் மூளை மற்றும் முதுகுத்தண்டு வளர்ச்சிக்கு உதவும். பீரியட்ஸ் நாட்களில் ஏற்படும் வலியைப் போக்கும் தன்மை கொண்டது கற்பூரவல்லி. குழந்தைகளுக்குக் கொடுக்கும் ஸ்நாக்ஸில் கற்பூரவல்லி பெஸ்ட் சாய்ஸ்.

ரஸ்தாளி: இதில் கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும்.  இதுவும் இன்ஸ்டன்ட் எனர்ஜியைக் கொடுக்கும். இதில் நார்ச்சத்து சற்று அதிகம் என்பதால் மலச்சிக்கல் உள்ளோர் எடுத்துக்கொள்ளலாம்.

செவ்வாழை: எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும், நோய் எதிர்ப்பாற்றலுக்கும் சிறந்த பழம். இதிலுள்ள வைட்டமின் ஏ, பார்வைத் திறன் பிரச்னை உள்ளவர்களுக்கும் நல்லது. வாரத்தில் ஒரு முறையோ, இரு முறையோ மட்டும்  ஒரு செவ்வாழை எடுத்துக்கொள்ளலாம்.

மலை வாழை: இந்தப் பழத்துக்கென பிரத்யேக மணமும் சுவையும் உண்டு. ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவக்கூடியது. நார்ச்சத்தும், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸும் அதிகம். நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

பூவன் பழம்: இன்ஸ்டன்ட் எனர்ஜியை கொடுத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, செரிமானத்தைச் சீராக்கக்கூடியது. எல்லாருக்கும் ஏற்றது.

ஏலக்கி: மற்ற வாழைப்பழங்களோடு ஒப்பிடுகையில், அளவில் சிறிய பழம் இது. லோ கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டது என்பதால், சர்க்கரை நோயாளிகளும் (ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில்) எடுத்துக்கொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கிச்சன் கீர்த்தனா: நாவல் பழ அல்வா

அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக  மோடியின் கே.கே. பிளான்… அதிர்ச்சியில் ஆர்.என்.ரவி

வயநாடு நிலச்சரிவு… மற்றொரு தமிழர் பலி… இரவிலும் தொடரும் மீட்பு பணி!

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. லோகேஷ் தனது அபிமான நடிகரான...