Skip to main content

மீண்டும் திருமணமா? - அமீர் கான் சொன்ன பதில்!

ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற பாலிவுட் நடிகர் அமீர் கான், இனி மீண்டும் திருமணம் செய்ய வாய்ப்பில்லை என சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் மிக முக்கியமானவர் பாலிவுட் நடிகர் அமீர் கான். சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும், உலக அளவில் இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் முயற்சிகளையும் பாலிவுட்டில் மேற்கொண்டவர் அமீர் கான். இந்த நிலையில், சமீபத்தில் நடிகை ரியா சக்ரபோர்ட்டியின் பாட்காஸ்ட் பேட்டியில் திருமணம் குறித்த தனது பார்வை குறித்து பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், " நான் ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து பெற்றவன். என்னிடம் திருமணத்தை பற்றி எந்தவித ஆலோசனையும் கேட்க வேண்டாம்" என ஜோக் அடித்தார்.

மேலும், "எனக்கு தனியாக இருக்க விருப்பமில்லை. எனக்கு ஒரு துணை வேண்டும். நான் விவாகரத்து செய்த இரு முன்னாள் மனைவிகளுடன் தற்போது வரை நல்ல உறவு முறையில் தான் உள்ளேன். நாங்கள் ஒரு குடும்பம் போல் இன்னும் நீடிக்கிறோம். வாழ்க்கை தீர்மானிக்க முடியாதது. எல்லோருக்கும் திருமண வாழ்க்கை ஒத்துப் போவதில்லை" என்றார்.

மீண்டும் திருமணம் செய்து கொள்வீர்களா? என நடிகை ரியா கேட்ட கேள்விக்கு "எனக்கு தற்போது 59 வயது ஆகிவிட்டது. எப்படி மீண்டும் திருமணம் செய்துகொள்ள முடியும். அது மிகக் கடினம். நான் என் குழந்தை, குடும்பம் என சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இன்னும் சிறந்த மனிதனாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்" என்றார்.

- ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சத்ரபதி சிவாஜி சிலைக்கு மோடி கேரண்டி… அப்டேட் குமாரு

மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை… ஒரே ஆண்டுக்குள் சுக்குநூறானது!

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. லோகேஷ் தனது அபிமான நடிகரான...