Skip to main content

'G.O.A.T' டிரெய்லர் ரிலீஸ் தேதி இது தான்!

 இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் ' கோட் ' திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கோட் '. இந்தத் திரைப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான மூன்று பாடல்கள் பல லட்ச பார்வையாளர்களைக் கடந்து பல சாதனைகளைப் படைத்து வந்தது. ஆனால், ரசிகர்கள் மத்தியில் பாடல்கள் குறித்த அதிருப்தியும், விமர்சனமும் சமூக வலைத்தளங்களில் காண முடிந்தது.

இந்த நிலையில், படத்தின் அடுத்த அப்டேட்டான படத்தின் டிரெய்லரை மிகச் சிறப்பாகத் தர வேண்டும் என அப்படக்குழு டிரெய்லர் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே வருகிற ஆக.19 ஆம் தேதி இந்தப் படத்தின் டிரெய்லரை ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அதற்கு நான்கு நாட்கள் முன்னதாக ஆகஸ்ட் 15ஆம் தேதியிலேயே டிரெய்லரை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனராம். ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் என்பதால் ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையிலும் இந்தப் படத்தின் டிரெய்லரைக் கொண்டு சேர்க்கலாம் என்கிற எண்ணத்தில் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஏற்கனவே ரிலீஸான படத்தின் மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், படத்தின் டிரெய்லர் நிச்சயம் சிறப்பாக இருக்க வேண்டும் எனத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக வெங்கட் பிரபுவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், மூன்று பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய அதிருப்தியால் சோர்வடைந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, படத்தின் ரீரெக்கார்டிங் பணிகளுக்குப் பின்பு உற்சாகமாகியுள்ளாராம்.

இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் செப்.5 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

- ஷா

Paris 2024 : ஒரே நாளில் 3 பதக்கம்… ஒலிம்பிக்கில் இன்று உயருமா இந்திய கொடி?

வினேஷ் போகத் தகுதிநீக்கம் : எதிர்க்கட்சிகள் அமளி… அவை தலைவர் வெளிநடப்பு!

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. லோகேஷ் தனது அபிமான நடிகரான...