Skip to main content

வசூலில் மிரட்டும் தங்கலான்... துரத்தும் டிமான்டி காலனி 2

கலைஞரின் குடும்ப வாரிசு என்கிற அடையாளம், பின்புலத்துடன் சினிமாவில் வம்சம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி.

வழக்கமாக ஆக்க்ஷன் திரைக்கதைகளில் நடித்து தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் கதாநாயகன்கள் நிரம்பிய சினிமாவில் தனிப்பாதையில் பயணித்து வருபவர் அருள்நிதி.

தனக்காக கதையை வடிவமைக்காமல் கதைக்கு என்ன தேவையோ அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் அருள்நிதி இதுவரை நடித்துள்ள படங்கள் அனைத்தும் கதையை மையமாக கொண்டவையே.

டிமாண்டி காலனி, மௌனகுரு, இரவுக்கு ஆயிரம் கண்கள், டைரி, கழுவேத்தி மூர்க்கன், தேஜாவு, தகராறு, ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் உள்ளிட்டவை அதற்கு சிறந்த உதாரணங்கள்.

இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்டி காலனி படத்தின் இரண்டாம்பாகம் எட்டு வருடங்களுக்கு பின் இந்த வருடம்ஆகஸ்ட் 15 அன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கியஅஜய் ஞானமுத்து இயக்கியிருக்கிறார்.

'டிமான்ட்டி காலனி 2' படத்தில் அருள்நிதி தவிர பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. சாம் சி எஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

விக்ரம், பா.ரஞ்சித், G.V. பிரகாஷ் கூட்டணியில் 160 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட தங்கலான் திரைப்படத்துடன் ஆகஸ்ட் 15 அன்று 290 திரையரங்குகளில் வெளியானது.

பிரம்மாண்டமான விளம்பரங்கள், அதிகப்படியான திரையரங்குகள் என தங்கலான் திரைப்படம் ஆதிக்கம் செலுத்தும் சூழலில் டிமாண்டி காலனி - 2 தாக்குப் பிடிக்குமா என்கிற கேள்விகள் எழுப்பபட்டது.

இந்நிலையில் படம் வெளியான முதல் நாள் 290 திரையரங்குகளின் மூலம் 3.62 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்து திரையரங்க வட்டாரத்தையும், எதிர்மறையான விமர்சனம் செய்தவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது டிமாண்டி காலனி - 2.

ஒருசில கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் முதல் பாகத்தின் தொடர்ச்சியான காட்சிகள், திகில் விஎப்எக்ஸ் என ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது டிமாண்டி காலனி - 2.

Image

தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ள திரையரங்குகளில் ஓடாத படங்களுக்கு கூட வெற்றி நிகழ்வுகளை முதல் நாள், மூன்றாம் நாள் கேக் வெட்டி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் டிமாண்டி காலனி - 2 வசூல் அடிப்படையில் வெற்றியை உறுதி செய்த பின் படக்குழு கதாநாயகன் அருள்நிதியுடன் நேற்றைய (17.8.2024) தினம் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடியுள்ளது.

ப்ரியா பவானி சங்கர் நடித்தால் படம் ஓடாது என்கிற விமர்சனங்களுக்கு இப்படத்தின் வெற்றி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

விக்ரம் நடித்த தோல்வி படமான கோப்ரா படத்தை இயக்கியஅஜய் ஞானமுத்து டிமான்டி காலனி - 2 பட வெற்றியின் மூலம் மீண்டு வந்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான தங்கலான் முதல் நாள் மொத்த வசூல் 11 கோடி ரூபாய், 290 திரைகளில் வெளியான டிமான்டி காலனி- 2 மொத்த வசூல் 3.70 கோடி ரூபாய். அடுத்தடுத்த நாட்களில் டிமான்டி காலனி2 வசூல் அதிகரித்து வருவதுடன், காட்சிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Image

அதேவேளையில் தங்கலான் திரைப்படம் கடந்த 3 நாட்களில் ரூ.53.64 கோடி உலகளவில் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இராமானுஜம்

திடீரென தமிழக தாயுடன் இளவயது போட்டோவை பகிர்ந்த கமலா ஹாரீஸ்… பின்னணி என்ன?

ஆவணி மாத நட்சத்திர பலன் – அவிட்டம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. லோகேஷ் தனது அபிமான நடிகரான...