Skip to main content

'கங்குவா' vs 'வேட்டையன்': பாதிக்குமா வசூல்?

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'வேட்டையன் ' திரைப்படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகும் என அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஜெய் பீம்' திரைப்படத்தின் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் , பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ' வேட்டையன் ' . இந்தத் திரைப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தத் திரைப்படம் நடிகர் சூர்யா நடிப்பில், பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ' கங்குவா ' திரைப் படத்துடன் திரைக்களத்தில் களமிறங்கவுள்ளதாக ஏற்கனவே சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்தப் படம் ' கங்குவா ' திரைப்படம் வெளியாகும் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகும் என அப்படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கடும் போட்டி நிலவும் எனத் திரைத்துறை வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுவே ஆகும். ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன் ஏறத்தாழ 33 ஆண்டுகள் கழித்து இணைந்து நடிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடைசியாக இவர்கள் இணைந்து நடித்த திரைப்படம் 1991 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ' ஹம் '.

லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

- ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்.... 

நீதிமன்றத்தில் ஆ.ராசா ஆஜர் : அமலாக்கத் துறைக்கு உத்தரவு!

முல்லை பெரியாறு அணை: பீதியை கிளப்பிய சுரேஷ் கோபி… செல்வப்பெருந்தகை கண்டனம்!

ஐ போனுக்காக 3 நாட்கள் பட்டினி … கட்டு கட்டாக பணத்துடன் வந்த பூ விற்கும் பெண்!

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. லோகேஷ் தனது அபிமான நடிகரான...