Skip to main content

பாக்ஸ் ஆபிஸில் விஜய் பற்ற வைத்த தீ... 'கோட்' கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

 விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான 'தி கோட்' திரைப்படம் செப்டம்பர் 5 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தில் நடிகர் விஜய் 2 வேடங்களில் நடித்திருந்தார். அந்த 2 கதாபாத்திரங்களுக்கு ஜோடிகளாக சினேகா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் அமீர், ஜெய்ராம், மோகன், பிரேம்ஜி, யோகி பாபு, லைலா, வைபவ், யுகேந்திரன் என மிகப்பெரிய திரை பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது.

அதுமட்டுமின்றி, விஜயகாந்த், திரிஷா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரின் கேமியோக்களும் படத்தில் இடம்பெற்றிருந்தன.

மேலும், சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டியில், தோனி களமிறங்கி சிக்ஸ்களை பறக்கவிடும் காட்சிகளும் படத்தில் இடம்பெற்றிருந்தன.

இப்படி படத்தில் பல திருப்பங்கள் நிறைந்திருந்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது. மறுபுறத்தில், யுவன் சங்கர் ராஜாவின் இசை விமர்சனத்தை பெற்றிருந்தது. இருந்தபோதும், இந்த படம் முதல் நாளில் ரூ.126.32 கோடி வசூலை பெற்று சாதனை படைத்திருந்தது.

இந்நிலையில், இப்படம் முதல் 4 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 'தி கோட்' படம் முதல் 4 நாட்களில் ரூ.288 கோடி வசூலை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், தனுஷ் நடித்த 'ராயன்' படத்தின் வசூலை இரண்டே நாட்களில் கடந்த 'தி கோட்', 2024-இல் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. 'ராயன்' திரைப்படம் உலக அளவில் ரூ.154 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.137 கோடி வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழில் மட்டும் ரூ.121.05 கோடி கலெக்ஷனை பெற்றுள்ளது. இந்தி மற்றும் தெலுங்கு காட்சிகள் மூலம், முறையே ரூ.8.3 கோடி மற்றும் ரூ.7.85 கோடி வசூலை பெற்றுள்ளது.

இந்தியாவை தொடர்ந்து, வட அமெரிக்காவில் அதிகப்படியாக ரூ.25 கோடி வசூலை 'தி கோட்' படம் பெற்றுள்ளது. அதை தொடர்ந்து, பிரிட்டனில் ரூ.7.5 கோடி வசூலையும், ஆஸ்திரேலியாவில் ரூ.3 கோடி வசூலையும் இப்படம் பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படம் வசூலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'லியோ' படத்தின் சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

- மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மிலாது நபி… செப்டம்பர் 17-ஆம் தேதி அரசு விடுமுறை!

ஓடிடி நிறுவனங்களுக்கு செக் வைத்த அமீர்கான்

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு ம...