Skip to main content

'கூலி' படத்தின் ஷூட்டிங் காட்சிகள் லீக்: படக்குழு ஷாக்... லோகேஷ் ரெக்வெஸ்ட்!



ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் லீக் ஆனதால், படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் கூலி படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

படத்தில் நடிக்கும் நடிகர்களின் பெயர் மற்றும் கதாபாத்திர பெயர்கள் சமீபத்தில் வெளியானது. ரஜினி தேவா கேரக்டரில் நடிக்கிறார். அதேபோல செளபின் சாஹிர் - தயாள், நாகர்ஜூனா - சைமன், சுருதிஹாசன்  - பிரீத்தி, சத்யராஜ் - ராஜசேகர்  கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி ஓணம் பண்டிகை அன்று கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் வேட்டையன் படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடலுக்கு ரஜினி டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகி வைரல் ஆனது.

இந்தநிலையில், கூலி படப்பிடிப்பின் போது நாகர்ஜூனா நடித்த சில காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நாகர்ஜூனா ஸ்டைலாக கூலிங் கிளாஸ் அணிந்தபடி, ஃபைட் செய்யும் காட்சிகள் லீக் ஆகியுள்ளது.

இதுதொடர்பாக லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "ஒரு வீடியோ லீக் ஆனதால், பலரின் இரண்டு மாத உழைப்பு வீணாகியது. இதுபோன்ற செயல்களை ஊக்கப்படுத்த வேண்டாம் என்று ஒவ்வொருவரிடமும் நான் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். இவர்கள் திரையனுபவத்தை முற்றிலுமாக ஸ்பாயில் செய்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார். கூலி படத்தின் லீக் காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாக பரவிவருகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூராடம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த ‘கோட்’… 13 நாட்களில் இத்தனை கோடியா?

Comments

Popular posts from this blog

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உச்சமாய் மூளைப் பிறழ்வுக

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு முக்கியமான வேலை

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம் நினைவுகளை விட்டு நீங்காத சுமை ! ’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம். தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது. அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர். சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக