Skip to main content

Posts

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. லோகேஷ் தனது அபிமான நடிகரான...
Recent posts

கூலி : ட்விட்டர் விமர்சனம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. படத்தில் ஆமிர்கான், நாகர்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், செளபின் சாஹர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளளனர். அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் முன்பதிவு வசூலில் கூலி பல சாதனைகளை படைத்துள்ள நிலையில், இன்று வெளியான கூலி திரைப்படம் எப்படி இருக்கிறது என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ! யுதிஸ்டன் 2.0 இந்த வயதில் சூப்பர் ஸ்டார் இவ்வளவு துடிப்பா வாய்ப்பே இல்லை கதை கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். அதே போல் வன்முறை சற்று குறைத்திருக்கலாம். படம் தாராளமாக பார்க்கலாம், என்ன இன்னும் கொஞ்சம் எங்கேஜ்ங்கான சீன்ஸ் எடுத்து இருந்தால் இன்னும் தரமாக இருந்திருக்கும். https://twitter.com/madhu882211/status/1955915904333832558 ج கூலி – உண்மையைச் சொன்னால், படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு மட்டுமே நல்ல விஷயம். படம் பார்த்த பிறகு, எல்லா சக்தியும் வடிந்து போனது போல் இருந்தது - பலவீனமான கதைக்களம், குளறுபடியான செயலாக்கம், எதிர்பார்ப்ப...

பகத் பாசில் ‘சம்பளம்’ இவ்ளோ…வா…?!

இன்றைய தேதியில் நாட்டின் மூலைமுடுக்கெங்கும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கிற நட்சத்திரக் கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் ஒருவராகத் திகழ்பவர் பகத் பாசில். ‘ஃபாஃபா’ என்பது ஜென்ஸீ தலைமுறை ரசிகர்கள் இவருக்கு வைத்த செல்லப்பெயர். கல்யாணி பிரியதர்ஷன் உடன் பகத் பாசில் நடித்த ‘ஓடும் குதிரா சாடும் குதிரா’ ஓணம் வெளியீடாக வரவிருக்கிறது. அதன் டீசர் சமீபத்தில் வெளியானது. தமிழில் வடிவேலு உடன் அவர் நடித்த ‘மாரீசன்’ திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், ஆரம்ப காலத்தில் பகத் பாசில் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன். ’கையெத்தும் தூரத்’ படத்தின் ஹீரோவாக அறிமுகமான பகத், சுமார் ஏழாண்டு கால இடைவெளிக்குப் பின்னர் ‘கேரளா கஃபே’, ‘பிரமணி’, ‘காக்டெய்ல்’ உள்ளிட்ட படங்களில் தலைகாட்டினார். பகத் பாசிலுக்குப் பெரியளவில் பெயர் வாங்கித் தந்த படம் ‘சப்பா குரிஷு’. இதில் வினீத் சீனிவாசன் இன்னொரு நாயகனாக நடித்திருந்தார். சமீர் தாஹிர் இயக்கிய இப்படம் தமிழில் ‘புலிவால்’ என்ற பெயரில்...

சூர்யாவைப் பாராட்டிய கேரள அமைச்சர்!

தமிழ் திரையுலகைச் சேர்ந்த சில நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் சமூக அக்கறையுடன் நலப்பணிகளை மேற்கொண்டு வருவது காலம்காலமாகத் தொடர்கிற விஷயம். அவர்களில் அதீதமான ஈடுபாட்டைக் காட்டுபவர்களின் முயற்சிகள் ஊடகங்களில் செய்திகள் ஆவதும், மக்களின் வரவேற்பைப் பெறுவதும் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், தந்தை சிவகுமார் வழியில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர் உயர்கல்வி பெற உதவும் வகையில் ‘அகரம் அறக்கட்டளை’யை நிறுவிச் செயல்படுத்தி வருகிறார் நடிகர் சூர்யா. சமீபத்தில் இதன் 15ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அது தொடர்பான செய்திகளும் ஊடகங்களில் வெளியானது. இந்த நிலையில், சூர்யாவுக்கும் அகரம் அறக்கட்டளைக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார் கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா. தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டிருக்கும் அவர், “சூர்யாவின் முயற்சி பாராட்டுக்குரியது, அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்வது” என்று கூறியிருக்கிறார். “சமூகத்தில் வறிய நிலையில் இருக்கும் மாணவ மாணவியர் கல்வி வழியே வாழ்வில் உயர அகரம் அறக்கட்டளை மேற்கொண்டுவரும் முயற்சிகள் ஊக்கமளிப்பத...

லோகேஷ் கனகராஜ் மாதிரி ஒருத்தரை பார்த்ததில்ல.. – ஸ்ருதிஹாசன்

கமல்ஹாசனை நாயகனாகக் கொண்டு ‘விக்ரம்’ எனும் ப்ளாக்பஸ்டர் தந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அவரது மகள் ஸ்ருதிஹாசன் உடன் ‘இனிமேல்’ என்ற ஆல்பத்தில் நடித்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் ஏராளம். ஆனால், அந்த ஆல்பம் பற்றிப் பேசுவதற்காக நேரில் சந்தித்தபோதுதான் ‘கூலி’ படத்தில் வரும் ஒரு பெண் பாத்திரத்தில் நீங்கள் நடிக்கத் தயாரா என்று ஸ்ருதியிடம் கேட்டிருக்கிறார் லோகேஷ். தன்னிடம் நேரடியாக ஒரு படத்தில் நடிப்பது பற்றி ஒரு இயக்குனரே நேரடியாகப் பேசியது வியப்பளித்ததாக முன்னர் கூறியிருந்தார் ஸ்ருதி. சில மாதங்கள் கழித்து ‘ஸ்கிரிப்ட்’ பணிகள் நிறைவடைந்த பின்னர் சத்யராஜ் ஏற்ற ராஜசேகர் பாத்திரத்தின் மகளாக ‘ப்ரீத்தி’ எனும் பாத்திரத்தில் ஸ்ருதி நடிப்பதாக முடிவாகியிருக்கிறது. இப்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து படம் ரிலீஸுக்கு தயாராக இருப்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாதிரி ஒருவரைப் பார்த்ததில்லை எனும் தொனியில் பேசினார் ஸ்ருதிஹாசன். ‘கூலி’ படப்பிடிப்புத் தளத்தில் அவர் எப்படியிருந்தார் என்று கூறியிருக்கிறார். “செட்ல இருக்...

கூலியை ’நக்கல்’ செய்தாரா சத்யராஜ்?!

நடிகர் சத்யராஜ் ஹீரோவாக நடித்த படங்களில் அவர் அடிக்கிற ‘காமெடி லூட்டி’கள் ரொம்பவே பிரபலம். அதுவும் கவுண்டமணி உடன் அவர் நடித்த படங்கள் இன்றும் நம் வயிற்றைப் பதம் பார்க்கும் ரகத்தில் இருந்து வருகின்றன. அந்தளவுக்கு அவை நம்மைச் சிரிக்க வைக்கின்றன. சில வேளைகளில் அந்த கிண்டல் ‘டமார்’ ‘டூமீர்’ என்று நாம் கொண்டிருக்கிற சில பிம்பங்களையும் சுக்குநூறாக்கும். அது போன்ற கிண்டலை மேடைகளிலும் அவ்வப்போது வெளிப்படுத்துவார் சத்யராஜ். கடந்த காலத்தில் அவற்றில் சில சர்ச்சைகளாக உருவெடுத்திருக்கின்றன. அப்படியொரு விஷயம் நிகழ்ந்துவிடுமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது சமீபத்தில் நடந்த ’திர்பனதாரி பார்பரிக்’ தெலுங்கு பட பத்திரிகையாளர் சந்திப்பு. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சத்யராஜ் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். ’பாகுபலி’ கட்டப்பா மாதிரியான பாத்திரங்களில் நடித்த நீங்கள் இது போன்ற சிறு பட்ஜெட் படத்தில் இடம்பெற்றது ஏன் என்ற கேள்விக்கு, இனி வரும் நாட்களில் இது போன்ற படங்களில் இடம்பெறுவதையே தான் விரும்புவதாகத் தெரிவித்தார் சத்யராஜ். பின்னர், ஒரு படத்திற்காகத் தயாராவதில...

சு ஃப்ரம் சோ - விமர்சனம்!

  Su From So Movie Review பட்ஜெட்டை விட பல மடங்கு வசூல்..! மிகுந்த காதலுடன் உருவாக்கப்படுகிற திரைப்படங்களை ரசிகர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். காரணம், படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞரும் காட்டிய சிரத்தையே, ரசிகர்களின் கவனத்தைக் கவரும் வகையிலான ஈர்ப்பை அப்படைப்புக்குள் பொதித்து வைக்கும். அந்த வகையில் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘சு ஃப்ரம் சோ’ கன்னடப் படத்தின் வெற்றி. நான்கு கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், கர்நாடகாவில் கடந்த பத்து நாட்களில் மட்டும் 34 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. கடந்த வாரம் இப்படத்தின் மலையாளப் பதிப்பு வெளியிடப்பட்ட நிலையில், இந்த வாரம் தெலுங்கு பதிப்பு வெளியாகவிருக்கிறது. ‘கூலி’ பரபரப்பு மட்டும் இல்லாவிட்டால், அடுத்த வாரம் தமிழிலும் இது ரிலீஸ் ஆகும் நிலை உருவாகியிருக்கலாம். சரி, பட்ஜெட்டை விடப் பல மடங்கு வசூல் குவிக்கிற அளவுக்கு இந்தப் படத்தில் என்ன புதுமை இருக்கிறது? கதையில் புதுமையா? ‘சு ஃப்ரம் சோ’ என்றால் ‘சுலோசனா ஃப்ரம் சோமேஸ்வரா’ என்று அர்த்தம். இந்த படத்தின் கதை கர்நாடகாவின்...