Skip to main content

Posts

42 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி - கமல்

நடிகர் சங்க கடனை அடைப்பதற்கான கலைநிகழ்ச்சியில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் இணைந்து நடிக்க உள்ளதாக பொதுக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேமா கமிட்டி விவகாரம், நடிகர் சங்க கட்டிட விவகாரம், தயாரிப்பாளர் சங்கத்துடனான மோதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இடையே தென்னிந்திய நடிகர் சங்க 68வது பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் இன்று காலை தொடங்கியது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையிலான இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகளுடன் ஏராளமான திரைக்கலைஞர்களும் பங்கேற்றுள்ளனர். பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொதுச்செயலாளரான நடிகர் விஷால் சைக்கிளில் வந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக வங்கியில் வாங்கப்பட்டுள்ள கடனை அடைப்பதற்காக கலைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு நாடகத்தில் நடிக்க உள்ளதாக சங்கத்தின் பொருளாளரான கார்த்தி அறிவித்துள்ளார். நடிக்க வந்த புதிதில் ரஜினி, கமல் இணைந்து தமிழ், இந்தி என 16 படங்களில் இணைந

‘35’ - ‘சின்ன கத காது’: விமர்சனம்!

  உதயசங்கரன் பாடகலிங்கம் தாய்மார்கள் காண வேண்டிய படம்! ஒரு திரைப்படம் என்றால் ஒவ்வொரு காட்சியிலும் பிரமாண்டம் தென்பட வேண்டும். ஹீரோயிசம் தூக்கலாக தெரிய வேண்டும். ஒவ்வொரு ஷாட்டிலும் அழகியல் அம்சங்கள் நிறைந்தாக வேண்டும். பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் தரும் வகையில் ஏதேனும் ஒரு அம்சம் திரைக்கதையில் வந்துகொண்டே இருக்க வேண்டும். கண்டிப்பாக, அவை ‘க்ளிஷேக்களாக’ இருக்கக் கூடாது. இப்படிப் பல நிபந்தனைகளைக் கையிலெடுத்துக்கொண்டு தியேட்டருக்குள் ரசிகர்கள் நுழைய ஆரம்பித்தபிறகு, குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு குடும்பத்தோடு பார்க்கத்தக்க திரைச்சித்திரங்களைக் காண்பது அருகிவிட்டது. அப்படியொரு சூழலில், முழுக்க ஒரு குடும்பத்தையும் அதிலிருக்கும் ஒரு சிறுவனின் ஏக்கத்தையும் பிரதிபலிக்கிற வகையில் அமைந்திருக்கிறது தெலுங்குப் படமான ‘35’. ‘சின்ன கத காது’ என்பது இந்த டைட்டிலுடன் ‘டேக்லைன்’ ஆக உள்ளது. அதற்கு ‘சின்ன விஷயம் கிடையாது’ என்று பொருள் கொள்ளலாம். டைட்டிலையும் படத்தில் வரும் சிறுவனையும் இணைத்துப் பார்த்தால், தேர்வில் வெற்றி பெற முடியாமல் அவன் தவிப்பதுதான் இப்படத்தின் கதையா என்ற கேள்வி தோன்றும். உண்மையில், அதுதான

வெறுத்து ஒதுக்கிய பெயர்... தவிர்க்க முடியாததாக மாறியது எப்படி? - மம்முட்டிக்கு 73 வயது!

பல மொழி படங்களில் நடித்த மம்முட்டியை கேரள ரசிகர்கள் மெகாஸ்டார் என கொண்டாடுகின்றனர். மம்முட்டி என்ற பெயர் அவருக்கு எப்படி வந்தது தெரியுமா? மம்முட்டி என்ற பெயரே அவருக்கு பிடிக்காமல் இருந்தது. ஆனால், காலப்போக்கில் அந்த பெயரே அவருக்கு நிரந்தரமாகிப் போன கதையை இங்கு பார்க்கலாம். அடிப்படையில் மம்முட்டி குடும்பத்திற்கும் சினிமாவிற்கும் சம்பந்தமே கிடையாது. மம்முட்டியின் தந்தை இஸ்மாயில் துணி மற்றும் அரிசி வியாபாரம் செய்து வந்தார். இஸ்மாயில் அவரது மனைவி பாத்திமாவுக்கும் பிறந்த 6 குழந்தைகளில் மூத்த மகன்தான் மம்முட்டி. கடந்த 1951ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி பிறந்த மம்முட்டிக்கு பெற்றோர்  வைத்த பெயர் முகம்மது குட்டி. பள்ளிக் கல்வியை முடித்த முகமது குட்டி எர்ணாகுளத்திலுள்ள மகாராஜாஸ் கல்லூரியில் பி.ஏ படித்தார்.  கல்லூரியில் சேர்ந்த போதுதான் முகம்மது குட்டி என்ற தனது பெயர் பட்டிக்காட்டுத்தனமாக இருப்பதாக தோன்றியது. உடனே முகம்மதுகுட்டி என்ற பெயருக்கு பதிலாக ஓமர் ஷெரிப் என்று மாற்றி வைத்து கொண்டார். சிலர் முகம்மது குட்டி என்ற பெயரை சுருக்கி, மம்முட்டி என்றே அழைத்தனர். ஆனால், இந்த பெயர் மம்முட்டிக்கு பிடிக

நிவின் பாலி மீதான பாலியல் புகார் : இயக்குநர்கள் சொன்ன தகவல்!

நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். குற்றம்சாட்டபட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர். இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி காலை வரை படப்பிடிப்பில் நிவின் பாலி கலந்து கொண்டார் என்றும், பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த 'பார்மா' எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் இயக்குநர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 வயது மதிக்கத்தக்க பெண் தாக்கல் செய்த வழக்கில், 'அந்த தேதியில் துபாயில் நடிகர் ஒரு கும்பலுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தார்' என குறிப்பிடப்பட்டிருக்கிறது. நடிகர் நிவின் பாலி அனைத்து ஊடகங்களின் முன், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். என் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் கூறினார். மேலும் இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் ஊ

11 YEARS OF VVS... சிவகார்த்திகேயனை ‘ஸ்டார்’ ஆக்கிய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’

  உதயசங்கரன் பாடகலிங்கம் சில திரைப்படங்களில் பெரிதாகக் கதை என்ற ஒரு வஸ்து இருக்காது. அந்த காலகட்டத்தில் ’ட்ரெண்டிங்’கில் இருப்பவர்கள் யாரும் இடம்பெற்றிருக்க மாட்டார்கள். பிரமாண்டத் தயாரிப்புக்கு நேரெதிராக ரொம்ப ‘சிம்பிளாக’ இருக்கும். முகம் தெரிந்த நடிப்புக்கலைஞர்கள், கவனிப்பைப் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள், புதுமுக இயக்குனர், புதிய தயாரிப்பு நிறுவனம் என்று ‘அனுபவ’ ஏணியில் ஏறத் தொடங்கியிருக்கும் பலர் ஒன்றிணைந்து அப்படத்தை ஆக்கியிருப்பார்கள். ஆனால், திரையில் தெரியும் ‘லைவ்லினெஸ்’ காரணமாக அப்படம் ரசிகர்களைக் குதூகலப்படுத்துவதாக இருக்கும். தியேட்டரில் கொண்டாட்டத்தை விதைக்கும். 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு அப்படியொரு மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு ஊட்டிய படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. பொன்ராம் இயக்கிய இப்படம்தான், ‘டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தவராக’ அடையாளப்படுத்தப்பட்ட சிவகார்த்திகேயனுக்கு ‘ஸ்டார்’ அந்தஸ்தை தந்தது. சூரி - சிவகார்த்திகேயன் காம்பினேஷனை சிலாகிக்கச் செய்தது. மிக முக்கியமாக, சத்யராஜை நெடுநாட்களுக்குப் பிறகு காமெடி வேடத்தில் காண வைத்தது. இந்தப் படம் வெளியாகி இன்றோடு 11 ஆண்டுக

கோட் பட முதல் நாள் வசூல்: விஜய் ரசிகர்கள் ஷாக்!

 விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியான நிலையில் முதல் நாளில் ரூ. 126.32 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் நேற்று (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு இடையே வெளியானது. முதல் காட்சியில் இருந்தே படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வர, பல திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆக நேற்று ஓடியது. மேலும் படத்தில் இயக்குநர் வெங்கட்பிரபுவின் அசத்தலான திரைக்கதையும், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம் உள்ளிட்டோரின் பங்களிப்பும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் கோட் திரைப்படம் நேற்று முதல் நாளில் ரூ. 126.32 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. இதன்மூலம் விஜயின் முதல் நாள் வசூல் சாதனையில் அவரது முந்தைய படமான லியோ ரூ.148.5 கோடியுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஓடிடி ரிலீஸ் பிரச்சனையால் வட இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் கோட் படத்தின் இந்தி வெர்சன் வெளியாகாத

கோட் முதல்நாள் வசூல் : கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த இந்தி!

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் அவரது ரசிகர்களின் உற்சாகமான கொண்டாட்டத்திற்கு இடையே இன்று (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பொதுவாக விஜய் படத்திற்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வெளியாகும் தியேட்டர்கள் மூலம் அதிக வசூல் கிடைக்கும். தமிழக வெற்றி கழகம் கட்சி அறிவிப்புக்கு பின் வெளியாகும் படம் என்பதால் தி கோட் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை தனிப்பட்ட முறையில் விஜய்யும் கவனித்து வருகிறார். அதற்கு வழி செய்யும் வகையில் உலகம் முழுவதும் கோட் திரைப்படம் வழக்கத்தை காட்டிலும் அதிகமான திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. லியோ திரைப்படம் உலகளவில் ரூ.148.5 கோடி வசூல் செய்ததாக அப்படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுவே விஜய் படத்தின் முதல் நாள் அதிகபட்ச வசூல் சாதனையாக பார்க்கப்படும் நிலையில், அதிக தியேட்டர்களில் இன்று வெளியாகியுள்ள கோட் அந்த சாதனையை முறியடிக்குமா என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்பதே உண்மை என திரையுலக வட்டாரங்கள் தெரிவ

கோட் : விமர்சனம்!

தமிழ் சினிமாவில் மசாலா படங்கள் எனும் ரகம் பரிணாமம் அடைந்து கொண்டே வருகிறது. கத்திச் சண்டை, அம்மா சென்டிமென்ட், தங்கச்சி சென்டிமென்ட், பாட்டாளி வர்க்கத்தின் காவலன் போன்ற விஷயங்களை கொண்டது தான் எம்ஜிஆர் ஃபார்முலா. இதுதான் தமிழ் சினிமாவின் முதல் மசாலா ஃபார்முலா. அதற்கு பிறகு, நாட்டுப்பற்று, அதே சென்டிமென்ட், காதல், பாசம் , இரண்டாம் பாதியில் ஒரு குத்துப் பாட்டு என அந்த ஃபார்முலாவில் அந்தந்த காலத்திற்கு ஏற்ப சிறிதளவு மாற்றங்களுடன் மசாலா படங்கள் வெளியாகின. அதன்படி, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள ' மாடர்ன் மசாலா ' திரைப்படம் தான் ' கோட் ' படத்தின் ஒன்லைன் ' சாட்ஸ் ' எனும் ரா ஏஜென்சியைச் சேர்ந்த விஜய், பிரசாந்த், பிரபு தேவா, மற்றும் அஜ்மல் பல்வேறு ஸ்பை ஆபரேஷன்களை பிசிறின்றி செய்து முடிப்பதில் வல்லவர்கள். இந்த நிலையில், ஒரு ரகசிய ஆபரேஷனுக்காக விஜய் பாங்காக் செல்ல நேர்கிறது. தன் குடும்பத்துடன் பேங்காக் செல்லும் விஜய் சந்திக்கும் பிரச்சனை, அதனால் ஏற்படும் இழப்பு, அந்த இழப்பிற்கு பிறகு அவர் வாழ்க்கையில் நடக்கும் திருப்பம் இதுவே ' கோட் '

தி கோட்: ராஜபாட்டை காட்டிய ‘டபுள் ஆக்‌ஷன்’ தமிழ் படங்கள்! இரட்டை வேடத்தில் அசத்தும் விஜய்

’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்) பட ட்ரெய்லரிலும் சரி, பர்ஸ்ட் லுக்கிலும் சரி, ரசிகர்களை ‘கூஸ்பம்ஸ்’ ஆக்கிய விஷயங்களில் ஒன்று, தந்தையாகவும் மகனாகவும் விஜய் பைக்கில் பயணிக்கும் ஷாட். வெவ்வேறு காலகட்டங்கள்ல அந்த இரண்டு கேரக்டரும் செய்யுற ‘டைம் ட்ராவல்’ தான் ’தி கோட்’ படத்தோட ஹைலைட்னு சொல்றாங்க. அதுக்காகத்தான், அமெரிக்கா வரைக்கும் போய் விஜய்யை இளமையா காட்டுறதுக்காக ‘டீஏஜிங்’ டெக்னாலஜியில விஎஃப்எக்ஸ் பணிகள் நடந்திருக்கறதாகவும் சொல்றாங்க. எது எப்படியிருந்தாலும்,  விஜய் இந்தப் படத்துல டபுள் ஆக்‌ஷன்ல கலக்கியிருக்கிறார்ங்கறது தான், அவரோட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தர்ற விஷயம். தமிழ்ல பல ஹீரோக்கள் டபுள் ஆக்‌ஷன் படங்கள்ல நடிச்சிருக்காங்க. அதுல பல படங்கள் ‘ப்ளாக்பஸ்டரா’ அமைஞ்சிருக்கு. சரி, தமிழ்ல வெளியான முதல் டபுள் ஆக்‌ஷன் படம் எதுன்னு தெரியுமா? அந்த படத்தோட பேரு ‘உத்தமபுத்திரன்’. 1940ஆம் வருஷம் அந்தப் படம் வெளியானது. அந்தப் படத்துல ஹீரோவா நடிச்சவர் பி.யு.சின்னப்பா. பிறகு குபேர குசேலா, மங்கையர்க்கரசி படங்கள்லயும் இரட்டை வேடங்கள்ல நடிச்சு, இன்னிக்கு பல ஹீரோக்கள் ‘டபுள் ரோல்’ல நடிக்கணும்னு ஆச

நடிகர் விஜய் செலுத்திய வரி எவ்வளவு தெரியுமா?

2023-24ஆம் நிதியாண்டில் அதிக வரி செலுத்திய பிரபலங்கள் பட்டியலை ஃபார்சூன் இந்தியா நிறுவனம் நேற்று (செப்டம்பர் 4) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் தளபதி விஜய் 2வது இடம் பிடித்துள்ளார். அவர் கடந்த நிதியாண்டில் ரூ.80 கோடி வரிப்பணமாக அரசுக்கு செலுத்தியுள்ளதாக ஃபார்சூன் இந்தியா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த 2023-24 நிதியாண்டு காலகட்டத்தில் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'லியோ' படத்தில் மட்டுமே நடித்துள்ளார். சுமார் ரூ.300 கோடி பொருட்செலவில் 'லியோ' படம் தயாரான நிலையில், பாக்ஸ் ஆபீஸில் அப்படம் சுமார் ரூ.620 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்திற்காக நடிகர் விஜய் ரூ.120 கோடி ஊதியமாக பெற்றதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து, 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியை துவங்கிய விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில், 'தி கோட்' (The Greatest of All Time) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 5 உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் சுமார் ரூ.400 கோடி பொருட்செலவில் தயாராகியுள்ளதாக, படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா